குல சேகர ஆழ்வார் ராகவனை தாலாட்டுகிறார்...
கோசலையின் மகனே, சனகனின் மருமகனே, தசரதனின் மகனே, என் கண்ணின் மணியே தாலேலோ என்று தாலாட்டுகிறார்....
அந்த தாலாட்டுப் பாடல்...இதோ ....
கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ
கொங்கு மலி = பரிமளம் நிறைந்த
கருங்குழலாள் = கரிய குழலை உடைய
கோசலை தன் குலமதலாய்! = கோசலையின் குலத்தில் உதித்த சிறந்த பிள்ளையாய். மதலை என்றால் தூண், பற்றும் பொருள், வீட்டின் உத்திரம், மரக் கலம் என்று பல பொருள் உண்டு.
தங்கு பெரும் புகழ்ச் = தங்கு (வினை தொகை ), தங்கிய
பெரிய புகழை உடைய
சனகன் திருமருகா! = ஜனகனின் மருமகனே
தாசரதீ! = தசரதனின் மகனே
கங்கையிலும் = கங்கையை விட
தீர்த்த மலி = சிறந்த தீர்த்தங்களை உடைய
கணபுரத்தென் கருமணியே! = திருக் கண்ணபுரத்தில் உள்ள
என் கண் மணியே
எங்கள் குலத்தின்னமுதே! = எங்கள் குலம் ? எந்த குலம் ?
குலசேகர ஆழ்வார் அரசனாய் இருந்தவர். எனவே, அரச குலம் என்று கொள்ளலாம். இல்லை வைணவ குலம் என்று கொள்ளலாம்.
இராகவனே! தாலேலோ = இராகவனே தாலேலோ
இன்னொரு தாலாட்டு:
http://www.blogger.com/blogger.g?blogID=4597935220111682070#editor/target=post;postID=7163879203846337203
இன்னொரு தாலாட்டு:
http://www.blogger.com/blogger.g?blogID=4597935220111682070#editor/target=post;postID=7163879203846337203
How many such lullabies are there in this series? I have heard one of them sung in Carnatic concerts - "Mannu pugazh kosalai ..."
ReplyDelete