கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்
கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை
விட்டு விடும்படி. இராவண கேட்பதாய் இல்லை. கடைசியாக சொல்கிறான்....
மானுடர் இருவரை
வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை
உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது
முடிக்கிலேன் எழுக போகென்றான்
மானுடர் இருவரை
வணங்கி
= இராம லட்சுமணர்களை வணங்கி
மற்றும் அக் கூன்
உடைக் குரங்கையும் கும்பிட்டு = அனுமன் மற்றும் இதர கூனுடைய குரங்குகளை கும்பிட்டு
உய்தொழில் = உயிர்
பிழைக்கும் தொழில்
உம்பிக்கும்
உனக்குமே கடன் = உன் தம்பியான விபீஷனனுக்கும் உனக்குமே கடன்
யான் அது முடிக்கிலேன் = என்னால அது முடியாது
எழுக போகென்றான் = நீ எழுந்து போ என்றான்
ஒரு புறம் கும்ப கர்ணனின் தன் மான உணர்ச்சியை தூண்டி விடுகிறான் - மானிடர்களையும், குரங்குகளையும் உன்னால் வணங்க முடியுமா ? நீ செஞ்சாலும் செய்வ, நான் மாட்டேன் என்று அவனை சமாதானத்தில் இருந்து விலக்கி போருக்கு செல்ல தூண்டுகிறான்.
மறுபுறம், அவனின் சகோதர பாசத்தை தொடுகிறான். உன் தம்பி விபிஷணன் போய் விட்டான், நீயும் போய் விடு, நான் தனியாக இருப்பேன் என்று மறைமுகமாக சுட்டுகிறான்.
அதாவது கும்ப
கர்ணன் சொன்ன வாதங்களை எல்லாம் விட்டு விட்டான்...அதற்க்கு அவனிடம் பதில் இல்லை.
அவனை உசுப்பு ஏத்தி விட்டு,
அவனை போருக்கு
செல்ல வைக்க வேண்டி,
இப்படி சொல்கிறான்.
கும்ப கர்ணன் provoke
ஆனானா இல்லையா ? இதற்க்கு கும்ப கர்ணன் என்ன சொன்னான் ?
நல்ல பாட்டு.
ReplyDelete