Pages

Thursday, April 19, 2012

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

திரு அருட்பா - கல்லார்க்கும் கற்றவர்க்கும்

இறைவன் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கிறான். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், தன்னை மதிப்பவன், தன்னை மதிக்காதவன் நல்லவன், பொல்லாதவன் என்று அனைத்திற்கும் சாட்சியாக நடுவில் நிற்கிறான்.

வள்ளலார் பாடுகிறார்....





கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 





கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே = படித்தவன், படிக்காதவன் இரண்டு  பேருக்கும் அவன் இன்பம் தரும் இன்பமாய் இருக்கிறான்

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே = ஊனக்கண் கொண்டு கண்டவர்கள், அது இல்லாமல் காண முடியாதவர்கள் இரண்டு பேருக்கும் ஞானக் கண் தரும் கண் போன்றவனே


வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே = வலியவர்களுக்கும் எளியவர்களுக்கும் வரம் தருபவன் அவன்.


மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே = இறைவனை நம்பி அவனை மதித்து வணங்குபவர்களுக்கும், மதிக்காமல் நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறியவர்களுக்கும் நல்ல புத்தியை தருபவன் அவன்


நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே = நல்லதுக்கும், பொல்லாததற்கும் நடுவில் நின்றவன்


நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே = மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே



எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே  = அனைவருக்கும் பொதுவாக இருப்பவனே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. = என்னுடைய அரசனே, நான் பாடும் இசை பாடலையும் அணிந்து அருளே 



இது இந்து மதத்தின் சிறப்பு. கிறிஸ்துவ, இஸ்லாம், போன்ற மதங்களின் கடவுள்கள் ரொம்ப கோபக்காரர்கள். நியாய தீர்ப்பு, இறுதி தீர்ப்பு, என்று ரொம்ப பயமுறுத்துவார்கள்.

இந்து கடவுள்கள் ரொம்ப சாத்வீகமானவர்கள். 

15 comments:

  1. சகோதரா, இது மிகவும் அருமையான் பாடல் ஆனால் நீங்கள் இறுதியில் கூறி இருக்கும் கருத்து வள்ளலாருக்கு எதிரானது. அவர் இறைவனை அல்லது சிவனை ஜோதியாய் கண்டவர். மதங்களை கடந்தவர். உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன, மதச்சாயத்தை கடந்து வர முயலுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. The Hebrew god is really jealous and angry at anybody worshiping other gods. He said, "Thou shalt have no other gods before me".

      Delete
    2. நீங்கள் சொல்வது சரி.வள்ளலார் ஒரு அத்வைத வாதி.ஆனால் இந்த சித்தாந்தத்தை இஸ்லாமும் கிறுஸ்துவமும் ஏற்காது என்பதும் உண்மையே.

      Delete
  2. Antony ruban thoughts its really good.

    ReplyDelete
  3. Antony ruban thoughts its really good.

    ReplyDelete
  4. Antony ruban thoughts its really good.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நன்றி. மதம் பிடித்த மனிதனால் வள்ளலாரின் நெறிகளை புரிந்துகொள்ளுதல் இயலாது. அவன் வேற்றுமையை மட்டும் காண்பான். கடவுள் இந்து அல்ல, கிருஸ்தவன் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. அவர் அவராகவே இருக்கிறார்.

    ReplyDelete
  7. கடவுளை உணரத்தான் முடியும். காண முடியாது தேவையும் இல்லை.

    ReplyDelete
  8. மிகவும் சரியான கருத்து. வள்ளலார் இறைவனை பொதுமையில் வைக்கிறார்

    ReplyDelete
  9. Kadavulae!!!
    Enru thaniyum intha....

    ReplyDelete
  10. தமிழர் தமிழர். இந்துக்கள் அல்லர். வள்ளலார் தமிழர்

    ReplyDelete
  11. Wrong statement - "இது இந்து மதத்தின் சிறப்பு. கிறிஸ்துவ, இஸ்லாம், போன்ற மதங்களின் கடவுள்கள் ரொம்ப கோபக்காரர்கள். நியாய தீர்ப்பு, இறுதி தீர்ப்பு, என்று ரொம்ப பயமுறுத்துவார்கள்.

    இந்து கடவுள்கள் ரொம்ப சாத்வீகமானவர்கள். " Vallalar statement - " நல்லார்க்கும் , பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே" வள்ளலார் கொள்கை - "ஆன்ம னேய அடிப்படை" - சமரச சுத்த சன்மார்க்க நெறி

    ReplyDelete