Pages

Sunday, April 8, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - vaccination


ஏதோ இந்த தேவாரம், திருவாசகம், பிரபந்தம் எல்லாம் ரொம்ப கடினமான விஷயம், நம்மால் அதை படித்து புரிந்து கொள்ள முடியாது என்று நினைப்போம்.

அது அப்படியல்ல.

சில பல பாடல்கள் கஷ்டம் தான், இல்லை என்று சொல்வதற்கில்லை.

ஆனால் , நிறைய பாடல்கள் மிக மிக எளிமையானவை...படித்தால் சட்டென்று புரியும், அட, நல்லா இருக்கே என்று நம்மை ஆச்சரியபட வைக்கும்.

அப்படிப்பட்ட பாட்டு ஒன்று, நாலாயிர திவ்ய பிரபந்தந்தில், நம்மாழ்வார் அருளிச் செய்த இரண்டாவது திருமொழியில் முதல் பாசுரம்.



நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!
காலம்பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து
வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும்
பண்டன்று பட்டினம் காப்பே.

என்ன அர்த்தம்?

நம்மை சுற்றி மம்மை பற்ற வரும் நோய்கள் நின்று கொண்டு இருக்கின்றன. Bacterias, viruses, germs, microbes, fungis, etc. நீரிலும், நிலத்திலும், காற்றிலும், எந்நேரமும் நம்மை சுற்றி சுற்றி வருங்கின்றன.

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!

நாமும் இவற்றில் இருந்து தப்பிக்க vaccination எடுத்து கொள்கிறோம்.

நம்மாழ்வாரின் ஒரு vaccine வைத்து இருக்கிறார்.

மெய்க்கொண்டு வந்து புகுந்து
வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும்

என்னுடைய உடம்பினுள் அந்த வேதங்களுக்கு தலைவன் தன்னுடைய பாம்பணையோடு வந்து குடி ஏறி விட்டான். எனவே நோய்களே

காலம்பெற உய்யப் போமின்

நீங்கள் என்னிடம் வரமால் எங்காவது போய் தப்பிச்சுகோங்க என்கிறார்.
நீங்க நினைக்கிற மாதிரி எந்த உடம்பு ஒன்றும் அப்ப மாதிரி காவல் இல்லாத பட்டினம் இல்லை...இப்போ ரொம்ப ஸ்ட்ராங்

பண்டன்று பட்டினம் காப்பே.
பண்டன்று - பழையது அன்று ..
பட்டினம் - பட்டினமான இந்த உடம்பு
காப்பே - காவல் உடையது


இப்படி பத்து பாடல்கள் பாடியுள்ளார். நம்பிக்கை உள்ளவர்கள் நோய் வராமல் இருக்க படியுங்கள். அது இல்லாதவர்கள், இலக்கிய சுவைக்காக படிக்கலாம்.


எப்படியானாலும் படியுங்கள்.

எனைத்தானும் ஆன்றவை கேட்க.

4 comments:

  1. Nice imagination by the Azhwar!

    ReplyDelete
  2. Lovely explanation.... சுவையாக விளக்கியிருக்கிறீர்கள், நன்றி.

    ReplyDelete
  3. இதுவும் நம்மாழ்வார் பாசுரம் இல்லை, பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர்

    ReplyDelete
  4. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு கூறிய விளக்கம் இப்போது நன்கு பொருந்தும்!

    ReplyDelete