கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்
இராமனை கானகம் அனுப்பிவிட்டு திரும்பி வந்த குகன் ஒருபுறம் நிற்கிறான்.
மறுபுறம் பரதன், கோசலை, சுமித்தரை, கைகேயி நிற்கிறார்கள்.
முதலில் பரதன் மேல் சந்தேகப் பட்ட குகன் பின் அவனை "ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ" என்று பரதனை பாராட்டுகிறான்.
விதவை கோலத்தில் மூன்று பெண்கள், அன்பே உருவான மகன் பரதன், குகன்...எல்லோரும் ஒரு புள்ளியில்.
உணர்ச்சிகளின் குவியலான இடம்.
குகன் கைகேயியை பார்த்து "ஆர் இவர்" என்று கேட்கிறான்.
எப்படி ?
சுடு மயானத்திடை தன் துணை ஏக, தோன்றல் துயர் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி ஏக, கழற்கால் மாயன் நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை, “ஆர் இவர்?” என்று உரை, என்ன; குரிசில் கூறும்
சுடு மயானத்திடை தன் துணை ஏக = சுடுகின்ற மயானத்தில் தன்னுடைய துணை (தசரதன்) போக
தோன்றல் துயர் கடலின் ஏக = தன்னிடம் இருந்து தோன்றிய (பரதன்) துயர் கடலில் போக
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி ஏக = கடுமையான கானகத்திற்கு கருணை கடலான (கலி = கடல்) இராமன் போக
கழற்கால் மாயன் = கழலை அணிந்த காலை உடைய மாயன், திருமால்
நெடுமையால் = தன்னுடைய உயர்ந்த உருவத்தால்
அன்று அளந்த உலகு எல்லாம் = அன்று அளந்த உலகை எல்லாம்
தன் மனத்தே நினைந்து = அத்தனை உலகத்தையும் தன் மனத்தால் நினைத்து
செய்யும் கொடுமையால் அளந்தாளை, = செய்யும் கொடுமையால் அளந்தாளை
“ஆர் இவர்?” என்று உரை, என்ன; குரிசில் கூறும் = யார் இவர் என்று படகு ஓட்டும் குகன் கேட்டான்
திருமால் கூட திருவடியால் அளந்தான். கைகேயி அத்தனை உலகத்தையும் மனத்தால் அளந்தாள்
"உலகை எல்லாம் மனத்தால் அளந்தாள்" என்றால், "நிலத்தாசை கொண்டவள்" என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு பொருள் இருக்கிறதா?
ReplyDeleteநிலத்தாசைஅல்ல பொருள். திருமால் காலால் அளந்தான், இவள் மனத்தால் அளந்தாள்.
ReplyDeleteஉலகத்தை மனத்தால் அளக்கவேண்டிய அவசியம் என்ன? நிலத்தாசைதானே காரணம்?
ReplyDeleteமனத்தே நினைந்து செய்யும்
Deleteகொடுமையால் அளந்தாளை....she surveyed the whole world in her mind/heart to do bad things or measured the whole world in terms of how much bad things can be done....
ம்ம்ம்ம்ம் ... சரிதான்.
ReplyDelete