கம்ப இராமாயணம் - இராமனின் வளர்ப்பு தந்தை
விஸ்வாமித்திரன் இராமனை ஜனகனிடம் அறிமுகப் படுத்துகிறான்.
இராமனின் குலம், கோத்திரம், அவன் மூதாதையர்கள் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு வந்து, இவன் தசரதனின் மகன் என்று சொல்லி நிறுத்துகிறான்.
விச்வாமித்ரனுக்கு ஒரு சந்தேகம்.
தசரதனோ அறுபதினாயிரம் மனைவிகளை உடையவன்.
அவன் மகன் இவன் என்றால், இவன் எத்தனை ஆயிரம் மனைவிகளை மணப்பானோ என்று ஜனகனுக்கு சந்தேகம் வந்து விட்டால் ?
அப்படி ஒரு சந்தேகம் வந்தால், சீதையை இராமனுக்கு மணம் முடித்துத் தர மாட்டான் என்று நினைத்து,
விசவாமித்திரன் சொல்வான் "தசரதன் இவனுக்கு பேருக்குத் தான் தந்தை, இவனுக்கு (இராமனுக்கு) உபநயனம் செய்வித்து, மறை ஓதி, வளர்த்தது எல்லாம் வசிட்டன் தான்" என்று.
வசிட்டனுக்கு ஒரே ஒரு மனைவி அருந்ததி.
இந்த இராமன் வசிட்டனைப் போல் ஒரே மனைவியுடன் இருப்பான் என்று
ஜனகனுக்கு சூசகமாக சொல்கிறான்.
அந்த நுட்பமான பாடல் வரிகள் இதோ இங்கே
திறையோடும் அரசு இறைஞ்சும்
செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை
வளர்த்தானும் வசிட்டன்காண்.
திறையோடும் = திறை என்றால் கப்பம். கப்பமும் கட்டி விட்டு
அரசு இறைஞ்சும் = தங்கள் அரசை காப்பாற்றும் படி கெஞ்சும்
செறி கழற் கால் = வீர கழல்களை அணிந்த காலை உடைய
தசரதன் ஆம் = தசரதன்
பொறையோடும் தொடர் = பொறுமை எப்போதும் உள்ள
மனத்தான் = மனத்தான்
புதல்வர் எனும் பெயரேகாண்!- = அவனடோ பிள்ளைன்னு பேருதானே தவிர
உறை ஓடும் நெடு வேலாய் = ஜனகனின் வேல் உரைக்குள்ளேயே இருக்கிறது. ஏன் ? அவனிடம் யாரும் சண்டைக்கு வருவதில்லை.
வேலுக்கு வேலை இல்லை.
உபநயன விதி முடித்து = உபநயனம் செய்து
மறை ஓதுவித்து = வேதங்களை சொல்லிக் கொடுத்து
இவரை = இவர்களை
வளர்த்தானும் வசிட்டன்காண். = வளர்த்தது எல்லாம் வசிட்டன் தான்
உறை ஓடும் நெடு வேலாய்- இந்த adjective இங்கே வர எதாவது காரணம் உண்டா? சம்பந்தம் இல்லாமல் இருக்கே? அப்படி கம்பர் எழுத மாட்டாரே ?
ReplyDeleteபாடலின் எதுகைக்காக போட்டிருப்பாரோ ?
Deleteஎது கை தவறினாலும் பரவாயில்லை, கவிஞருக்கு எதுகை தவறக் கூடாதல்லவா ?...:)
ஆஹா!! பின்றீங்க!! கம்பர் படித்து படித்து ஒரு கவிஞர் உருவாகிறார?
ReplyDeleteகப்பம் கட்டிவிட்டு அர்சுக்காகக் கெஞ்சுவது யார் என்பது சரியாக விளங்கவில்லையே?!
ReplyDeleteஅரசுக்கு கீழ் உள்ள சிற்றசர்கள்...இதில் என்னையா சந்தேகம் உங்களுக்கு?
Delete