கம்ப இராமாயணம் - அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்
இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்...
"இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.
அஞ்சன வண்ணத்தான்தன்
அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை
வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை
நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன
முனிவனும். கருத்துள் கொண்டான்.*
அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்
கதுவாமுன்னம்.= படுவதற்கு முன் (அது ஏன் என்று தெரியவில்லை)
வஞ்சிபோல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகிநின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்
'நீ அழைத்திடுக!’ என்று சொல்வது விச்வாமித்திரனா, இராமனா?
ReplyDelete"நெஞ்சினால் பிழைப்பு இலாள்" என்று சொல்லி விட்டதால், கம்பன் அவளைப் பிழை இல்லாதவள் என்று கடைசியில் ஒப்புக்கொள்கிறானா?
I think it is Viswaamithran. I saw some explanations which say it is Raman. In the poem prior to this, Rama already takes bow from her. Anyway it does not matter. Both are equally powerful people.
ReplyDeleteKamban, does not give any conclusion. He leaves things to the reader to decide. That is good. It adds more value to the epic. The discussion can continue for ages...:)