திருக் குறள் - புன்னகையா ? பொன் நகையா ?
அவள்: எனக்கு இந்த செயின் எனக்கு நல்லா இருக்கா ?
அவன்: ம்ம்ம்ம்...
அவள்: நல்லா இல்லையா ?
அவன்: இல்ல நல்லா தான் இருக்கு.
-------------------------------
அவள்: இந்த கம்மல்ல நான் எப்படி இருக்கேன் ? அழகா இருக்கேனா ?
அவன்: ம்ம்ம்ம்
அவள்: ஏண்டா இப்படி ஒரு ரசனை கேட்ட ஜன்மமா இருக்க ? எப்ப
பார்த்தாலும் ஒரு ம்ம்ம்ம் இதுதான் answer ஆ ?
அவன் : இல்ல நல்லாத்தான் இருக்கு...:)
அவள்: என்ன சிரிப்பு ?
அவன்: ஒண்ணும் இல்ல..உனக்கு இந்த நகை எல்லாம் போட்டாதான் அழகா இருக்கும் அப்படின்னு யாரு சொன்னா ? இந்த நகை எல்லாம் போடாமலேயே நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா ? ஐயோடா..இந்த வெட்கத்து இணையா இன்னொரு நகை இருக்கா என்ன ?
அவள்: போடா...அப்படி பார்க்காத....
-----------------------------
பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
கணியெவனோ வேதில தந்து
---------------------------------
சொன்ன நம்பணும்......இது திருக் குறள் தான்...
பிணை ஏர் மட நோக்கு நாணமும் உடையாளுக்கு
அணி எவனோ ஏதில தந்து
பிணை = ஜோடி
ஏர்= அழகான, எழுச்சி உள்ள. பிணை ஏர் என்பது அழகான பெண் மான் என்று
வழங்குவது மரபு.
மட நோக்கு = மருண்ட பார்வையும்
நாணமும் = நாணமும், வெட்கமும்
உடையாளுக்கு = உடையவளுக்கு
அணி = அணிகலன்கள், நகைகள்
எவனோ = யார்
ஏதில = சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஒரு தொடர்பும் இல்லாமல்
தந்து = தந்தது ?
அவள் வெளியே பார்பதற்கு மான் போல் இருப்பாள். அது ஒரு அழகு.
அவளின் உள் அழகு அவள் கொண்ட நாணம், வெட்கம்.
அது மற்றொரு அழகு.
இப்படி உள் அழகும், வெளி அழகும் கொண்ட அவளுக்கு மற்ற அணிகலன்கள் எதற்கு என்று வள்ளுவர் கேட்கிறார்.
உண்மைதான். பெண்களுக்குத் தன் இயல் அழகே போதாதா?
ReplyDeleteதூள் பாடல். தூள் சீன். தூள் வசனம்.
All credit goes to Mr. Thiru Valluvar...:)
Deleteநீங்கள் சினிமாவிற்கு கதை வசனம் எழுதலாம் போல இருக்கு.
ReplyDeleteSUPERB.
இந்த blog எழுதுறத நிப்பாடிர சொல்றீங்க...:)
DeleteRS, See the above comment,There is one more person who enjoys your prologue. wonderful comparison of a penn with mann.
ReplyDeleteRevathi.
she is suggesting me to stop this blog and go to cinema and bore those people...:)
DeleteCredit goes to you too.:-)
ReplyDelete