கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?
மண்டோதரி புலம்புகிறாள்.
இராவணன் எப்பேர்பட்ட வீரன்.
அவனை ஓர் அம்பா கொல்ல முடியும்?
அவனை ஓர் மானிடன் கொல்ல முடியுமா ?
ஒரு மானிடனுக்கு இவ்வளவு வீரமா ?
என்று கேட்பதன் மூலம் அவ்வளவு இருக்காது என்று சொல்கிறாள்.
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
ஆரம் = (முத்து, மணி) மாலைகளை (ஆரம் = மாலை. தே + ஆரம் = தேவாரம்)
போர் = போர்த்திய, அணிந்த
திரு மார்பை = திரு மார்பை
அகல் முழைகள் = அகன்ற குகைகள்
எனத் திறந்து = என்று திறந்து
இவ் உலகுக்கு = இந்த உலகத்தை
அப்பால் = தாண்டி
தூரம் போயின, = தூரம் போயின
ஒருவன் = ஒருவன். அவ்வளவு தான் சொல்லுகிறாள். இராமன் என்று கூட கிடையாது
சிலை = வில்
துரந்த சரங்களே; = துறந்த அம்புகள்
போரில் தோற்று = போரில் தோற்று
வீரம் போய், = வீரம் போய்
உரம் குறைந்து, = வலிமை குறைந்து
வரம் குறைந்து, = வரம் எல்லாம் வலிமை குறைந்து
வீழ்ந்தானே! = வீழ்ந்து கிடக்கின்றானே
வேறே! கெட்டேன்! = நானும் துக்கத்தில் ஆழ்ந்தேன்
ஓர்அம்போ = ஒரு அம்பா
உயிர் பருகிற்று, இராவணனை? = இராவணின் உயிரை பருகிற்று? (இருக்காது)
மானுடவன் ஊற்றம் ஈதோ! = ஒரு மானிடனின் வலிமை இவ்வளவா (இருக்காது)
பின் எது தான் இராவணனை கொன்றது ?
மேலே உள்ள link இல் பாருங்கள். எது இராவணனை கொன்றது என்று தெரியும்.
(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)
தன் கணவன் வீழ்ந்து கிடப்பதை "வீரம் போய், உரம் குறைந்து" என்று சொல்வது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்?
ReplyDeleteமிக நல்ல பாடல். தந்ததற்கு நன்றி.