கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்
அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்கி அவம் மேல் மையல் கொள்கின்றனர்
மன்மதனும் தன் மலர் அம்புகளை எய்த வண்ணம் இருக்கிறான்.
அம்பு எய்து எய்து அவன் அம்புராத் துணியில் உள்ள அம்பு எல்லாம் தீர்ந்து விட்டது
பாவம் அவனும் தான் என்ன செய்வான்.அம்பு இல்லாமல் நிராயுத பாணியாய் நிற்கிறான் வேற என்ன செய்வது என்று
தெரியாமல் கையை அவனுடைய வாளின் மேல் வைத்தானாம்....
கம்பரின் அந்த அருமையான கவிதை..
வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?
உடைவாளினும் கை வைத்தான்.
பொருள்:
வையம் பற்றிய = அந்த ஊரில் (மிதிலையில்) உள்ள
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான்
மங்கையர் = பெண்கள்
எண்ணிலர் = எண்ண முடியாத அளவுக்கு அதிகமானவர்கள்
ஐயன் = இராமனின்
பொற்புக்கு = அழகுக்கு, பொலிவுக்கு
அளவு இலை = எல்லை இல்லை
ஆதலால் = ஆதலால்
எய்யும் = (மலர் அம்புகளை) எய்யும்
பொன் சிலை மாரனும் = பொன் போன்ற வில்லை கொண்ட மன்மதனும்
என் செய்வான்? = என்ன செய்வான்?
கை அம்பு அற்று = கையில் உள்ள மலர் அம்புகள் எல்லாம் தீர்ந்து (எவ்வளவு பெண்கள், எவ்வளவு அழகு, எவ்வளவு ஜொள்ளு)
உடைவாளினும் = இடுப்பில் உள்ள வாளின் மேல்
கை வைத்தான் - கை வைத்தான்
கம்ப ராமாயணத்தில் இன்னொரு "பெண்கள் ஜொள்ளு விடும்" கவிதை ஒன்று இருக்கிறதல்லவா? அதைப் பற்றி எழுத முடியுமா? இந்தக் கவிதை "சுமார்"தான்!
ReplyDeleteஅருமை நண்பரே! படிக்கப் படிக்க நாவூறும் தமிழ்க்கனிகளை எடுத்துச் சொல்லும் தமிழ் அழகு! (இந்தப் பாவில் மட்டும் ஒரு சீரை விட்டுவிட்டீர்கள் அது சொற்பொருளில் உள்ளதுதான் - கை “அம்பு அற்று” அதையும் சிவப்புச் சொற்களில் சேர்த்துவிடுங்கள்
ReplyDeleteநான் அனானிமஸ் அல்ல, (ஏனோ அப்படி வருகிறது!)
Delete--நா(ன்). நா.முத்துநிலவன் https://valarumkavithai.blogspot.com/)