Pages

Monday, May 21, 2012

பெரிய புராணம் - குளிரடிக்குதே


பெரிய புராணம் - குளிரடிக்குதே

சேக்கிழார் குளிர் பற்றி ஏன் இவ்வளவு சொல்கிறார் என்று அடுத்த blog இல் பார்க்கலாம்...

அதற்கு முன், எலும்புவரை எட்டிப் பாயும் குளிர் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்...

பயங்கர குளிர் காலம்.

நாள் எல்லாம் வாடைக் காற்று வீசிக் கொண்டு இருக்கிறது.

சோலைகளில் உள்ள செடி கொடிகளும் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

சூரியன் கூட குளிரில் நடுங்கி அப்பப்ப வருவதும் போவதுமாய் இருக்கிறான் என்றால் எவ்வளவு குளிர் என்று பார்த்துகொள்ளுங்கள்.

சேக்கிழார் ஏதோ Aarctic , Antaractic range க்கு build up தருகிறார்...தமிழ் நாட்டில் அடிக்கும் குளிருக்கு...

வாடை காற்று வீசும் அந்த பாடல்....
   


மொய்பனிகூர் குளிர்வாடை முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளுங் குலைந்தசையக்குளிர்க்கொதுங்கி
வெய்யவனுங் கரநிமிர்க்க மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவு மடங்குவது மாகுமால்.

எதுக்கு வம்பு, பேசாம பதம் பிரித்து விடலாம்...

மொய் பனி கூர் குளிர் வாடை முழுதும் உலவும் பொழுதாய்
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி 
வெய்யவனும் கர நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை
ஐது வெயில் விரிபதுவும் மடங்குவதும் ஆகுமால் 

மொய் பனி = மிகுந்த பனி

கூர் = குளிர் ஊசி போல கூர்மையாக குத்துகிறது

குளிர் = குளிர்ந்த

வாடை = வாடைக் காற்று (வடக்கில் இருந்து வருவது வாடைக் காற்று, தெற்கில் இருந்து வருவது தென்றல்)

முழுதும் = நாள் முழுவதும்

உலவும் = அங்கும் இங்கும் அந்த குளிர் உலவி கொண்டு இருக்கும்

பொழுதாய் = பொழுதில்

கொய் தளிர் = கொய்யத் தகுந்த தளிர் இலைகள்

மென் சோலைகளும் = மென்மையான சோலைகளும்

குலைந்து அசைய = தடுமாறி அசைய

குளிர்க்கு ஒதுங்கி = குளிருக்கு பயந்து ஒதுங்கி

வெய்யவனும் = சூரியனும்

கர = ஒளியாகிய கரத்தினை

நிமிர்க்க மாட்டான் போல் = நீட்ட முடியாமல்

விசும்பின் இடை = மேகத்தின் இடையில்

ஐது = ஐயத்துடன், சந்தேகத்துடன்

வெயில் = வெயில்

விரிபதுவும் = விரிந்து வருபதுவும்

மடங்குவதும் = பின் மறைவதும் (ஒளிக் கரத்தை சுருட்டி மடக்கி வைத்து கொள்கிறான்)

ஆகுமால் = ஆகிக் கொண்டு இருந்தான்

சூரியனுக்கே அந்த குளிரை தாங்க முடியவில்லை என்றால்.....





1 comment:

  1. நிஜம்தான். இது என்ன வட துருவம் போல எழுதுகிறாரே! அய்யாவுக்கு உடுக்க உடை இல்லை, இருக்க இடம் இல்லை என்று ஊகிக்கிறேன். குளிரில் நடுங்குகிறார். ஆனால் பாட்டு என்னவோ நன்றாக இருக்கிறது.

    ReplyDelete