கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்
இராவணன் இறந்து கிடக்கிறான்.
குப்புற விழுந்து கிடக்கிறான்.
அகன்ற மார்பு. பரந்து விரிந்த இருபது கைகள்.
பார்பதர்ற்கு அவன் நிலத்தை கட்டி பிடித்து கொண்டு கிடப்பது போல
இருக்கிறது.
விபீஷணன் அவன் மேல் விழுந்து கதறி கதறி அழுகிறான்.
மண்டோதரி புலம்பலை விட சோகம் ததும்பும் பாடல்கள் விபீஷணன் துக்கம் ததும்பும் பாடல்கள்.
அதில் இருந்து இன்னொரு பாடல்...
போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?'
வெற்றித் திருமகளை, கலை மகளை, புகழ் மகளை எல்லோரையும் அணைத்துக் கொண்டாய்....அது எல்லாம் பத்தாது என்று திருமகளை (சீதையையும்) அணைக்க விரும்பினாய், அதனால் என்று மண் மகளை அணைத்து கொண்டு கிடக்கிறாய் என்று புலம்புகிறான்.
போர்மகளை, = வீரத் திருமகளை, வெற்றி அனைத்தும் பெற்றாய்
கலைமகளை, = கலை மகளை - ஞானம் எல்லாம் பெற்றாய்.
புகழ்மகளை, = புகழ் மகளை, நிறைந்த புகழ் பெற்றாய்
தழுவிய கை = அவர்களை எல்லாம் தழுவிய நீ (வீரம், ஞானம், புகழ் எல்லாம் பெற்ற நீ)
பொறாமை கூர = இத்தனையும் பெற்று, மற்றவர்கள் பொறாமை படும்படி
வாழ்ந்த நீ
சீர்மகளை, = சிறந்த பெண்ணான
திருமகளை, = திருமகளை
தேவர்க்கும் = தேவர்களுக்கும்
தெரிவு அரிய = தெரிந்து கொள்ள முடியாத
தெய்வக் கற்பின் = சிறந்த கற்பின்
பேர்மகளை, = பேர் பெற்றவளை
தழுவுவான் = தழுவ நினைத்து
உயிர் கொடுத்து = அதனால் உயிர் கொடுத்து
பழி கொண்ட பித்தா! = பழி கொண்ட பித்தனே
பின்னைப் = பின்னால்
பார்மகளைத் = நில மகளை
தழுவினையோ, = அணைத்து கிடந்தாயோ
திசை யானைப் = எட்டு திக்கு யானைகளின்
பணை இறுத்த = தந்தைகளை உடைத்த
பணைத்த மார்பால்?' = பரந்த மார்பால்
அருமையான புலம்பல். (ஒரு புலம்பல் கூட அருமையாக இருக்க முடியுமா? "சுக ராகம் சோகம்தானே" என்பது போல!)
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் இதைப் பற்றி எழுதலாமே?!
நன்றி.
Edhai patri ? Pulambal in general or Pulambal with reference to Raavanan ?
Deleteவிபீஷணன் புலம்பல் பற்றி.
ReplyDeleteஅன்பினியீர், வணக்கம்.
ReplyDeleteபணை இறுத்த = தந்தைகளை உடைத்த
இதற்கான விளக்கம் “தந்தங்களை உடைத்த“ என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
எழுத்துப் பிழையானல் திருத்திக்கொள்ளலாம்தானே?
உங்கள் முயற்சி வித்தியாசமானது பாராட்டுகள்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
http://valarumkavithai.blogspot.in/
புதுக்கோட்டை - 622 004
பிழையை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி. வரும் காலங்களில் இது போன்ற பிழைகள் வராமல் எழுத கவனம் செலுத்துவேன்.
ReplyDeleteஅருமையான புலம்பல். (ஒரு புலம்பல் கூட அருமையாக இருக்க முடியுமா? "சுக ராகம் சோகம்தானே" என்பது போல!)
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் இதைப் பற்றி எழுதலாமே?!
என்று கேட்ட திரு திலிப் அவர்களின் கவனத்திற்குக் கண்ணதாசனின் கவிதை ஒன்று -
தொழுவது சுகமா, வண்ணத்
தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா, உண்ணும்
விருந்துதான் சுகமா? இல்லை.
பழகிய காதல் எண்ணிப்
பள்ளியில் விழுந்து நித்தம்
அழுவதே சுகம்என் பேன்யான்
அறிந்தவர் அறிவா ராக” - கடைசி வரியில்தான் கண்ணதாசன் கவியரசாகிறார்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
http://valarumkavithai.blogspot.in/