Pages

Saturday, June 23, 2012

சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


பஞ்சம் என்றால் ஐந்து.
சிறு என்றால் சின்னது
ஐந்து சிறிய வேர்களை (மூலம்) கொண்டு உருவாக்கிய மருந்து எப்படி உடலுக்கு நன்மை செய்கிறதோ, அது போல், இந்த சிறு பஞ்ச மூலம் பாடல்கள் நம் வாழ்க்கைக்கு நன்மை செய்யும்.
அதில் இருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை தருகிறேன்.


பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது, உணர்வு.



பூத்தாலும் காயா மரம் உள; = பூ பூத்தாலும் காய்க்காத மரங்கள் உண்டு, அது போல

நன்று அறியார், = நல்லது (கெட்டது) அறியாதவர்கள்

மூத்தாலும் மூவார், = வயதானாலும் சான்றோர் ஆகா மாட்டார்கள் 

நூல் தேற்றாதார்; = புத்தகங்களை படித்து ஆராய்ந்து அதில் உள்ளவற்றை 

அறிந்து தேறாதவர்கள்

பாத்திப் = பாத்தியில் 

புதைத்தாலும் = புதைத்தாலும்

நாறாத வித்து உள; = முளைக்காத விதைகள் உள்ளன. புத்தகத்தை வாசித்தால் மட்டும் போதாது. அதை அறிந்து தேற வேண்டும்.

பேதைக்கு = முட்டாளுக்கு

உரைத்தாலும் , = எவ்வளவு சொன்னாலும்

செல்லாது உணர்வு. = மண்டையில் ஏறாது



1 comment:

  1. Thank you for introducing சிறு பஞ்ச மூலம். Waiting for few more songs.

    ReplyDelete