நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்
நான் மணி கடிகை என்பது பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று.
கடிகை என்றால் உயர்ந்த ரத்தினம் என்று பொருள். நான் மணி கடிகையில் ஒவ்வொரு பாடலும் நாலு உயர்ந்த கருத்துகளை கொண்டுள்ளது.
யார் யாருக்கு தூக்கம் வராது என்று ஒரு பாடல்...
திருட நினைப்பவர்களுக்கு, காதல் வயப் பட்டவர்களுக்கு, சொத்து சேக்கணும் என்று நினைப்பவர்களுக்கு, சேர்த்த சொத்தை காபந்து பண்ண நினைப்பவர்களுக்கு தூக்கம் வராது.
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்.
கள்வமென் பார்க்குந் துயிலில்லை = திருட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு
காதலிமாட்டு = காதலியிடம்
உள்ளம்வைப் பார்க்குந் = உள்ளத்தை பறி கொடுத்தவர்களுக்கு
துயிலில்லை = தூக்கம் வராது
ஒண்பொருள் = அதிகமான பொருளை (பேராசை)
செய்வமென் பார்க்குந் = அடைய நினைப்பவர்களுக்கு
துயிலில்லை = தூக்கம் வராது
அப்பொருள் = அப்படி அடைந்த பொருளை
காப்பார்க்கும் இல்லை துயில். = காவல் செய்பவர்களுக்கு தூக்கம் வராது
Interesting poem.
ReplyDelete