திருக்குறள் - காதலை மறைக்க முடியாது
தாய் (தன் கணவனிடம்): ஏங்க, நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கிறான்னு நினைக்கிறேன்.
தந்தை: எப்படி சொல்ற ? உன் கிட்ட வந்து ஏதாவது சொன்னாளா ?
தாய்: இல்லீங்க...எனக்கு என்னவோ தோணுது..கொஞ்ச நாளாவே அவ கிட்ட என்னவோ ஒரு மாத்தம் தெரியுது...
தந்தை; போடி, உனக்கு வேற வேலை இல்லை...காதலிச்சா என்ன..அது ஒண்ணும் பெரிய தப்பு இல்லையே....
--------------------------------
தோழி: ஏண்டி, என்ன ஏதாவது loves -ஆ ?
அவள்: இல்லையே .. உன்கிட்ட சொல்லாமலா ?
தோழி: இந்த கதை எல்லாம் என்கிட்டே விடாத...உன் முகத்தை பார்த்தாலே தெரியுது...நெஜமா சொல்லு...லவ் தான...அட இங்க பார்ரா வெட்கத்தை....
----------------------------------------
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
நிறையரியர் மன் = இவள் அடக்கம், கற்பு இவற்றால் நிறைந்தவள்
மன்அளியர் = இவள் மிக எளிமையானவள் என்று
என்னாது = நினைத்துப் பார்க்காமல்
காமம் = காதல்
மறையிறந்து = இரகசியம் இறந்து, அதாவது இரகசியம் இல்லாமல்
மன்று படும் = ஊர் அறிய வெளிப்பட்டு விடும்
That means the more innocent you are, the more difficult to hide your love?! Interesting.
ReplyDeleteஇந்த 1138வது குறளில் சொன்னதை பெண்ணே கூறுவதாக 1254வது குறளில் சொல்லுகிறார்:
ReplyDeleteநிறைஉடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறைஇறந்து மன்று படும். (1254)