Pages

Thursday, July 19, 2012

இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; ‘ எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

அவள் கேட்டது இரண்டு வரங்கள்.

"என் மகன் அரசாள வேண்டும், சீதையின் துணைவன் வனம் ஆள்வது"

கேட்டது இரண்டு வரம். ஆனால் அவள் இராமனிடம் சொன்ன போது, இதில் இல்லாத மேலும் சிலவற்றை சேர்த்துக் கொள்கிறாள்....


ஆழி சூழ் உலகம் எல்லாம்
    பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
    தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
    புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
    இயம்பினன் அரசன்‘‘ என்றாள்

முதல் வரம்: ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள

இரண்டாவது வரம்: "பூழி வெம் கானம் நண்ணி ...ஏழ்  இரண்டு ஆண்டின் வா"

இடையில் உள்ள வரிகள் எல்லாம் கேட்காத வரங்கள்....


மூன்றாவது வரம்: தாழ் இரும் சடைகள் தாங்கித்,
நான்காவது வரம்:   தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
ஐந்தாவது வரம்:     புண்ணியத் துறைகள் ஆடி,
இது எல்லாம் அவளே சேர்த்துக் கொண்டது.

எங்கே கானகம் போனால், அங்கு போய் படைகளை திரட்டி கொண்டு வந்து பரதன் மேல் படையெடுத்து வந்து அயோத்தியை கைப்பற்றி விடுவானோ என்ற பயம்.
"நீ காகனம் போ. அந்த கானகத்தில் உன்னை யாரும் பார்த்தால் கூட அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக த"தாழ் இரும் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற் கொண்டு, புண்ணிய துறைகள் ஆடி"" என்று சேர்த்துக் கொண்டாள்...

பெண்ணின் மனம் எவ்வளவு விசித்திராமாய் வேலை செய்கிறது....

1 comment:

  1. ‘தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ என்பதற்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமிகளின் விளக்கம்- ‘தீயவை’ என்று இங்கு வருவது சாதாரண அர்த்தமான தீயவைகள் என்பது அல்ல. ‘தீ அவை’ என்று பிரித்து தீ யானது ஸமஸ்க்ருத மூன்றாவது தீ; அது புத்தி என்பதைக் குறிக்கும் (தீமஹி). எனவே கைகேயியானவள் புத்திகள் யாவினும் சிறந்த புத்தியை உடையவள் என்பதைக் குறிக்கும்.

    இதே பொருளில் திருப்பாவை 23 ம் பாடல்
    ‘மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

    ReplyDelete