Pages

Monday, July 16, 2012

பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பெரிய பலன்களை அடைய வேண்டுமானால் சில சிறிய தியாகங்களை செய்யத்தான் வேண்டும்.

ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப் பெற முடியாது.

எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு

அதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று சொல்லுவார்கள். 

இந்த பிறவியில் நல்லன செய்து, ஏற்பவர்க்கு இட்டு, அவன் தாள் வணங்குதல் போன்ற சிறய "வினைகளை" செய்தால், வீடு பேறு, மோட்சம் பேன்ற பெரிய பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த பழமொழிப் பாடல்

பாடல்:

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே - விரிபூ
விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு
வராஅஅல் வாங்கு பவர்.

பொருள்:


சிறிய பொருள்கொடுத்துச் = சிறிய பொருள் கொடுத்து

செய்த வினையால்  = பொருளையும் கொடுத்து செய்யும் வினை எது ? 
தானம் செய்வது. ஏற்ப்பவர்க்கு இடுவது.

பெரிய பொருள் = பெரிய பொருள் (மறுமைக்கு கிடைக்கும் வீடு பேறு, 
மோட்சம் போன்ற பெரிய பொருள்)

கருது வாரே  = விரும்புவாரே

விரிபூ விராஅம் புனலூர = விரிகின்ற பூக்களை கொண்ட நீர் நிலைகளை 
கொண்ட ஊரின் தலைவனே

வேண்டயிரை விட்டு = வேண்டிய + அயிரை (மீனை) + விட்டு

வராஅஅல் = வரால் (என்ற பெரிய மீனை)

வாங்கு பவர். = பிடிப்பவர்கள்

நீங்கள் எதைப் பெற, எதை கொடுக்கப் போகிறீர்கள்?


No comments:

Post a Comment