கம்ப இராமாயணம் - உறையிட்ட தயிர் என பரந்த காதல்
இராமனை பார்த்த பின், சீதையை காதல் நோய் வாட்டுகிறது.
காதல், கண் வழி நுழைந்து உடல் எங்கும் பரவி நோய் செய்கிறது.
அது எப்படி என்றால்
பாலில் ஒரு துளி தயிரை உரை விட்டால் எப்படி அது எப்படி அந்த பால் முழுவதும் பரவி, அந்த பாலை எப்படி அடியோடு மாற்றி விடுகிறதோ அது போல.
தயிர் பரவுவது மட்டும் அல்ல...பாலின் குணத்தை மாற்றி விடுகிறது. அது
போல் காதலும் மனதில் துளி விழுந்தாலும் நம்மை அடியோடு மாற்றி விடுகிறது.
அந்த அருமையான பாடல்...
மால் உற வருதலும். மனமும் மெய்யும். தன்
நூல் உறு மருங்குல்போல். நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்.
பால் உறு பிரை என. பரந்தது எங்குமே.
மால் உற வருதலும்.= ஆசை, காதல் மிகுதியாக வருவதாலும்
மனமும் = மனமும்
மெய்யும் = மெய்யும், உடலும்
தன் நூல் உறு = தன்னுடைய நூல் போன்ற
மருங்குல்போல் = இடை போல்
நுடங்குவாள்; = தளர்வாள்
நெடுங் கால் = நீண்ட கரிய
உறு கண் = பெரிய கண்ணின்
வழிப் புகுந்த = வழியே புகுந்த
காதல் நோய். = காதல் நோய்
பால் உறு பிரை என = பாலில் இட்ட பிறை தயிர் என
பரந்தது எங்குமே.= எல்லா இடத்திலும் படர்ந்தது
என்ன ஒரு கற்பனை! கவிக்குக் கம்பந்தான்.
ReplyDelete