Pages

Tuesday, August 21, 2012

கம்ப இராமாயணம் - இராம நாமம்


கம்ப இராமாயணம் - இராம நாமம்


இராம நாமம் எவ்வளவு சிறந்தது ? அதை கூறுவோருக்கு என்ன என்ன பலன் கிடைக்கும் ?

கம்பர் சொல்கிறார்...



நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

சீர் பிரித்த பின்:

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை 
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே

பொருள்:

நாடிய பொருள் கை கூடும் = தேடிய பொருள் கை கூடும்

ஞானமும் புகழும் உண்டாம் = அறிவும் புகழும் சேரும்

வீடு அயல் வழியுமாக்கும் = முக்தி (வீடு பேறு) அடைய வழி வகுக்கும்

வேரியன் கமலை நோக்கும் = தேன் நிறைந்த தாமரையில் இருக்கும் திருமகளை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை = பெரிய அரக்கர் சேனை

நீறு பட்டு அழிய   = சாம்பலாகி அழிய  

வாகை சூடிய = வெற்றி பெற்ற

சிலை இராமன் = வில்லை கொண்ட இராமன்

தோள் வலி கூறுவோர்க்கே = தோளின் ஆற்றலை கூறுவோர்க்கே 

கம்ப இராமாயணத்திற்கு இணையான ஒரு நூல் இல்லை என்று வைணவர்கள் இறுமாத்திருந்த காலம் ஒன்று உண்டு. 

சிவா ஞான முனிவர் என்ற சைவ சமய முனிவர் இந்த பாடலில் பல பிழைகளை சுட்டி காட்டி உள்ளார். 

அந்த பிழைகளை பற்றி பின்னர் மேலும் மேலும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த பாட்டில் என்ன பிழை என்று அறிய வேண்டுமா ?



1 comment:

  1. என்ன கேள்வி SIR? பிழையைப்பற்றி மட்டுமல்ல சர்ச்சயைப்பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete