கலிங்கத்துப் பரணி - கடல் அளவு அமுதம்
கொஞ்சம்போல அமுதம் கிடைத்தாலே எவ்வளவு இனிமையாக இருக்கும்..?
அதுவே கடல் அளவு கிடைத்தால் எப்படி இருக்கும் ?
அவள் கடல் அளவு அமுதம் போன்றவள்...அள்ள அள்ள குறையாத இன்பம்..
வற்றாத இன்பக் கடல்...
உடுக்கை போல் சிறுத்த இடை, காது வரை நீண்ட விழி, இளமையான அவள் மார்பு ...
ஒரு நாள் அவர்களுக்குள் ஊடல்...பாக்க மாட்டேன் என்று கதவை சாத்திக் கொண்டாள்...
அவளிடம் கெஞ்சுகிறான்..."கதவை திற"என்று கொஞ்சுகிறான்...அவள் மிஞ்சுகிறாள்..
அவர்கள் இடையே ஊடல் நாடகம் ஊடாடிக் கொண்டு இருக்கிறது....
சூதளவு அளவேனும் இளமுலைத்
துடியளவு அளவெனும் நுண் இடைக்
காதளவு அளவெனும் மதர்விழிக்
கடலமுது அனையவர், திறமினோ!
சூதளவு = ஒரு வித சூதாடும் கருவி போன்ற
அளவேனும் இளமுலைத் = அளவுள்ள இளமையான மார்பகங்கள்
துடியளவு = உடுக்கை போன்ற
அளவெனும் நுண் இடைக் = அளவுள்ள நுண்ணிய இடை
காதளவு அளவெனும் மதர்விழிக் = காது வரை நீண்ட மதர்க்கும் விழி
கடலமுது அனையவர்,= அமுதக் கடல் போன்றவளே
திறமினோ! = கதவை திறடா, செல்லம்
கடலமுது அனையவர் என்றால் ஏதோ கடவுளைப் பற்றித்தான் பாட வருகிறார் என்று நினைத்தேன். நல்ல வேளை அப்படி இல்லை.
ReplyDelete