Pages

Thursday, September 20, 2012

தேவாரம் - மலரும் காதல்


தேவாரம் - மலரும் காதல் 


பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்றெல்லாம் கேட்டு இருப்பீர்கள்...சில திரைப் படங்கள் கூட வந்து இருக்கின்றன.

இதற்கெல்லாம் முன்னோடி நாவுக்கரசர். 

அவள், அவனைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். "அவன் பேரு என்னடி"என்று அவளுடைய நண்பிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள்.

"அவன் எப்படி இருப்பான், கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா" என்று அவனைப் பற்றி மேலும் விசாரிக்கிறாள்.

" அவன் இருக்கும் ஊரு, சொந்த ஊரு" எல்லாம் கேட்டு அறிந்து கொள்கிறாள்

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மேல் காதல் வயப்படுகிறாள் 

அவள் சொந்த வீடே அவளுக்கு அந்நியமானது.

அப்பா அம்மா கூட யாரோ மூன்றாம் மனிதர்கள் போல நீங்கிப் போனார்கள்

அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறின. எந்நேரமும்  அவன் நினைப்பு தான். 

தன்னை தானே மறந்தாள்.

தன் பெயரையே மறந்தாள்

அவனுக்கே எல்லாம் என்று ஆனாள்


முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் 
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் 
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் 
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் 
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் 
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே



முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் = முதலில் அவளுடைய பெயரைக் கேட்டாள் 

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  = அவனுடைய குணநலன்களை கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்  = அவன் இருக்கும் இடத்தை கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்  = அவன் மேல் பைத்தியமாக ஆனாள் (பிச்சி = பைத்தியம்)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்  = அம்மாவையும் 
அப்பாவையும் விட்டு விலகினாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை = பழக்க வழக்கங்களை மறந்தாள்

தன்னை மறந்தாள் = தன்னையே மறந்தாள் 

 தன் நாமம் கெட்டாள்  = தன் பெயரையும் மறந்தாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே = அவன் பாதங்களை சரணம் அடைந்தாள்


6 comments:

  1. இந்த பாடல் படிக்கிற பொழுது சிவகாமியின் சபதம் தான் நினைவுக்கு வருகிறது. கதையின் கடைசியில் சிவகாமி இந்த பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே இறைவனடி சேர்ந்து விடுவாள். அவள் ஒரு கற்பனைப்பாத்திரம் என்றே நம்ப முடியாத படி கல்கி அவர்கள் கதை எழுதி இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. சிவகாமியின் சபதம் படித்துவிட்டு இந்தப் பாலைப் பற்றிதெரிந்துொள்ள வதேன் நான்...

      Delete
  2. ஒரு கடவுள் மேல் ஒரு பெண்ணுக்கு இப்படியும் காதல் வருவது ஆச்சரியமே!

    ReplyDelete
  3. இறைவன் மீது மேலிட்ட அதிதீவிரமான பகுதியின் உத்தம நிலை फ!!

    ReplyDelete
  4. கதையின் முடிவாக மிகப் பொருந்தும் பாடல் .கண்ணீீர் வரும்படி இருக்கும். ஆசிரியரின் அறிவுக்கும் திறமைக்கும் பாராட்டு

    ReplyDelete