திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?
பக்த கோடிகள், இறைவனை நம்பாதவர்களை விட புத்திசாலிகளா ?
இறைவனை தேடுவதும் அவனை அடைவதும் ஒரு அறிவான செயலா ? இறை அருள் பெற்ற பின் ஒருவன் முன்பிருந்ததை விட அறிவு அதிகம் பெற்றதாக கூற முடியுமா ? இறை அருள் பெறாதவர்கள் அறிவில் குறைந்தவர்களா ?
இந்த குழப்பம் மாணிக்க வாசகருக்கும் இருக்கிறது. இறைவனிடமே கேட்கிறார். "உன் அருள் பெறுவதற்கு முன் நான் அறிவற்றவனாக இருந்தேன் என்று எனக்கு தெரியும்.. ஆனால், உன் அருள் பெற்ற பின், என் அறிவு கூடி விட்டதா?" என்று
பாடல்:
அறிவ னேஅமு தேயடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.
சீர் பிரித்த பின்
அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அரு ஈசனே
பொருள்
அறிவனே = அறிவில் சிறந்தவனே
அமுதே = அமுதம் போன்றவனே
அடி நாயினேன் = நாயையை போன்ற அடிமையான நான்
அறிவனாகக் கொண்டோ = என்னை அறிவுடையவனாக ஆக்குவதற்கோ
எனை ஆண்டது = எனை ஆண்டு கொண்டது ?
அறிவிலாமை = (நான்)அறிவு இல்லாமை இருந்தது
அன்றே கண்டது = அன்றே நான் கண்டு கொண்டது
ஆண்ட நாள் = நீ என்னை ஆண்டு கொண்ட நாள் முதல்
அறிவனோ = நான் எதையும் அறிந்தவனா ?
அல்லனோ = இல்லை அறிவில்லாதவனோ ?
அரு ஈசனே = நான் அதை தெரிந்து கொள்ள அருள் புரிவாய் ஈசனே
No comments:
Post a Comment