ஆத்திசூடி - இயல்வது கரவேல்
எது முடியுமோ, அதை மறைக்காமல் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் சொல்லுவார்களே Realising one's potential என்று, அது போல.
எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவு படிக்க வேண்டும்.
எவ்வளவு வேலை பார்க்க முடியுமோ, அவ்வளவு வேலை பார்க்க வேண்டும்.
எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு
எவ்வளவு தானம் பண்ண முடியுமோ, அவ்வளவு.
இயல்வது என்றால் முடிந்த வரை.
கரவேல் என்றால் மறைக்காமல் என்று பொருள்
.......................
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.
என்பார் மணிவாசகர் ...
செய்கிறோமா ? எட்டு மணிநேரம் வேலை செய்ய முடியும் என்றால், ஆறு மணி நேரம் செய்கிறோம். நம்மால் பிறர்க்கு உதவ முடியும், ஆனால் செய்வது இல்லை.
சாலையில் அடி பட்டு கிடக்கும் மனிதனை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி போகிறோம்.
பசி என்று கை ஏந்துபவர்களுக்கு பத்து பைசா தர்மம் பண்ணுவது இல்லை.
முடியாததை செய் என்று சொல்லவில்லை அவ்வை பாட்டி. முடிந்ததையாவது மறைக்காமல் செய் என்கிறாள்.
முடிந்த வரை செய்து கொண்டு இருந்தால், அந்த முடிந்தவற்றின் எல்லை கோடுகள் தானே விரியும்.
நாம் ஏன் முடிந்ததை செய்வது இல்லை ?
என்னால் நிறைய செய்ய முடியும், செய்யவும் ஆசை இருக்கிறது...ஆனால் வாய்ப்பு இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்போருக்கு அவ்வை பதில் சொல்கிறாள்...அடுத்த ப்ளாக்-இல்
After reading your blogs im becoming hard core of fan of thiruvalluvar, kambar, oviayar etc.. for each poem my loyalty keeps on changing. now ovai paati became my most favorite.
ReplyDeleteமுடிந்ததை மறைக்காமல் செய்தால், தன்னைத் தானே செருக்காகக் காட்டிக்கொள்வது போல் இருக்காதா?! "பார், என்னால் என்ன செய்ய முடியும் பார்" என்பது போல?
ReplyDeleteCan it also be interpreted as 'you must do charity/ give alms to the extent possible, without hoarding your wealth' ?
ReplyDelete