திரு அருட்பா - சும்மா இருக்கும் சுகம்
சும்மா இருப்பதுவே சுகம். மீண்டும் மீண்டும் இந்த கருத்து காலந்தோறும் மலர்ந்திருக்கிறது.
ஆத்ம ஞானம் அடைந்தவர்களுக்கு கர்மம் தேவை இல்லை என்கிறது கீதை.
"சும்மா இரு" அற சொல் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்பார் அருணகிரி நாதர்.
Sit quietly, doing nothing, spring comes, and the grass grows by itself.
என்கிறது zen தத்துவம்
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
என்பார் பத்திரகிரியார்.
அந்த சுகம் என்று வரும் என்று ஏங்குகிறார் வல்லாளர் இங்கே
பாடல்
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
சீர் பிரித்த பின்
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்
பொருள்
இன்று வருமோ = இன்று வருமோ
நாளைக்கே வருமோ = நாளைக்கே வருமோ
அல்லது = அல்லது
மற்று என்று வருமோ அறியேன் = அது என்று வருமோ, நான் அறியேன்
என் கோவே = என் தலைவனே
துன்று மல வெம் மாயை அற்று = காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி
வெளிக்குள் வெளி கடந்து = இதற்கு அர்த்தம் எனக்கு தெரியவில்லை. எது வெளி, அந்த வெளிக்கு அப்பால் இருக்கும் வெளி எது ? பல உரைகளை படித்த பின் மிஞ்சுவது குழப்பம் தான். ஒரு உரை இப்படி போகிறது.
"மாயையாலாகிய உடம்பினுள் புறக்கரணம் அகக்கரணமென வகைப்பட்டு நிற்கும் முப்பத்தொரு தத்துவங்கட்கும் அப்பாலுள்ள நிலை அகவெளி. அவற்றிற்கு அப்பாலுள்ள சிவத்தத்துவத்துக்கு மேலுள்ள நிலை “வெளிக்குள் வெளி” யாகும். அவ்வெளியில் ஞான விளக்கம் தந்து இன்புறுவிப்பது “பரசிவம்”. அதனைத் தரிசிப்போர்க்குக் கீழே கழித்துப் போந்த கருவி கரணங்கள் இல்லாமையால் சும்மா இருப்பதன்றிச் செயலில்லை. அந்தபரசிவபோக வாழ்வு “சும்மா இருக்கும் சுகம்” "
- ஔவை துரைசாமி பிள்ளை உரை.
சும்மா இருக்கும் சுகம் = சும்மா இருக்கும் சுகம்
எதற்கும் ஆசைப் படாமல், அது வேண்டும், இது வேண்டும் என்று தவிக்காமல், இருப்பது போதும் என்ற திருப்தியுடன், சும்மாதான் இருந்து பாருங்களேன்.
சும்மா இருப்பது மிகவும் கடினம். சும்மா இருப்பது என்றால், எந்த மனச் சலனமும் இல்லாமல் இருப்பது. நல்லதும் அல்ல, கேட்டதும் அல்ல, எதுவும் நினைக்கக் கூடாது. ரொம்பக் கடினமான செயல்!
ReplyDeleteமிக நன்று
ReplyDeleteவெளிக்குள் வெளி கடந்து------இங்கு வெளி என்பது சுத்த வெளி இறை , அதுக்குள் இருக்கும் வெளி என்பது நம் தான் அதாவது நமக்குள் இருக்கும் வெளி இந்த பிரபஞதிதில் இருப்பது இரண்டு மட்டும் தான் ஃ. நிலை அலை undefined சிவன் சக்தி
ReplyDeleteவேதாந்த திசை நாத வெளி
ReplyDelete