Pages

Monday, December 24, 2012

இராமாயணம் - துயில் துறந்த ஐயன்


இராமாயணம் - துயில் துறந்த ஐயன்


முன்பொருநாள் தேவர்கள் எல்லோரும் திருமாலிடம் சென்று "அரக்கர்கள் எங்களோடு வேறுபட்டு எங்களை துன்புறுத்துகின்றனர். அதிலிருந்து எங்களை காப்பாற்று" என்று வேண்டினர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று, ஆதி சேஷன் மேல் துயில் கொண்டிருந்த ஐயனாகிய திருமாலும், தன் துயிலை விட்டு பூலோகத்தில் அவதரித்தான். அப்படி அவதரித்தவனை தன் குலத்திற்கே முடிவை தேடித் தரும் சூர்பனகை கண்டாள்.

  
பாடல்



எண் தகும் இமையவர், 'அரக்கர் 
     எங்கள்மேல் 
விண்டனர்; விலக்குதி' 
     என்ன, மேலைநாள் 
அண்டசத்து அருந் துயில் 
     துறந்த ஐயனைக் 
கண்டனள், தன் கிளைக்கு 
     இறுதி காட்டுவாள்.

பொருள் 

எண் தகும் இமையவர் = புகழ் பெரும் தேவர்கள். எண் என்பதற்கு எண்ணிக்கை என்று பொருள் கொண்டால் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் பொருள் சொல்லலாம். இமையவர் = இமைக்காதவர்கள்

'அரக்கர் எங்கள்மேல் விண்டனர்; விலக்குதி' = அரக்கர்கள் எங்கள் மேல் வேறு பட்டனர் (விண்டனர் = வேறுபட்டனர் ). அதை விலக்குவாய்
 
என்ன = என்று

மேலைநாள் = முன்பு ஒரு நாள்
 
அண்டசத்து = முட்டையில் இருந்து பிறந்த (பாம்பு, ஆதி சேஷன்)

அருந் துயில் = உயர்ந்த துயில் 
 
துறந்த ஐயனைக் = துறந்த, விடுத்த, ஐயனை 
 
கண்டனள் = கண்டாள் 

தன் கிளைக்கு இறுதி காட்டுவாள். = தன் சுற்றத்தார்க்கு இறுதி காட்டுவாள்

இதை தொடர்ந்து சூர்பனகையின் ஜொள்ளு படலம் ஆரம்பம்....

1 comment:

  1. சீக்கரம் ஜொள்ளு படலத்தை ஆரம்பிக்கவும்.

    ReplyDelete