இராமாயணம் - சுந்தரி, சொல்
இராமன் வில்லை முறித்துவிட்டான் .. அதை அங்கு நின்று பார்த்த சீதையின் தோழி, அந்த செய்தியை சீதையிடம் சொல்ல மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓடி வருகிறாள்.
அவளுக்கு அளவுக்கு மீறிய மகிழ்ச்சி. பித்து பிடித்தவளை போல ஓடி வருகிறாள்.
வந்தவள் சீதையை கண்டதும் மேலும் மகிழ்ச்சி கொள்கிறாள். ஆனந்தம் பொங்குகிறது.
சீதையின் தோழிதானே. சீதையை கண்டவுடன் அவளுக்கு வணக்கம் சொல்ல வேண்டியவள் தானே.?
வந்தவள் சீதையை தொழவில்லை, மூச்சு வாங்குகிறது ஓடி வந்த வேகத்தால், ஆ ஊ என்று சந்தோஷத்தில் சப்தம் போடுகிறாள். சீதைக்கு அதை பார்க்க சிரிப்பாய் வருகிறது. சீதை, அவளின் தோளைத் தொட்டு, "சுந்தரி, சொல்" என்று சொன்னபின், தோழி ஒரு நிலைக்கு வருகிறாள். தான் யார், என்ன செய்தோம் என்ற நினைவு அப்போதுதான் அவளுக்கு வருகிறது.
அப்போது தான் சீதையை பணிந்து, வந்த விஷயத்தை சொல்கிறாள்...
ஒரு மிகப் பெரிய காப்பியத்தை எழுதிக் கொண்டு போகும் போது , இந்த மாதிரி சின்ன சின்ன சம்பவங்களை கூட விட்டு விடாமல் அழகாகச் சொல்வதில் கம்பன் மிக உயர்ந்து நிற்கிறான்....
பாடல்
வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
‘சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்’ என. தொழுது சொல்லுவாள்;
பொருள்
வந்து அடி வணங்கிலள் = வந்தவுடன் சீதையை அடி பணியவில்லை
வழங்கும் ஓதையள் = ஓதை என்றால் அர்த்தம் இல்லாத சப்த்தம்
அந்தம் இல் உவகையள் = எல்லை இல்லாத மகிழ்ச்சியுடன்
ஆடிப் பாடினள் = ஆடினாள் பாடினாள்
சிந்தையுள் மகிழ்ச்சியும் = உன் சிந்தையின் மகிழ்ச்சியும்
புகுந்த செய்தியும் = அதில் புகுந்த செய்யும்
சுந்தரி! சொல்’ என = சுந்தரி சொல் என்று சீதை சொன்ன வுடன் சுய உணர்வு பெற்று
தொழுது சொல்லுவாள் = தொழுது சொல்லுவாள் (அதற்க்கு பின் தான் தொழுதாள் ). அவ்வளவு சந்தோஷம்.
ஆஹா, அருமை.
ReplyDeleteவில்லை முறிப்பதை சீதை பார்க்கவில்லையா?
Santhoshathla Thala kaal puriyalanu solrangale athu ithu thana!good one.
ReplyDelete