திருக்குறள் - என்னால் அதைச் செய்ய முடியுமா ?
ஒரு பெரிய காரியத்தை செய்ய முனையும் போது , இதை நம்மால் செய்ய முடியுமா என்ற சந்தேகம், ஒரு தளர்ச்சி வருவது இயற்க்கை.
நம்மால் இந்த மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற முடியுமா ? மெடல் வாங்க முடியுமா ? நம் தொழிலை இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக மாற்ற முடியுமா என்று சந்தேகம் வரும்.
இந்த தளர்ச்சி முதலில் இருக்கக் கூடாது. அதை முதலில் தூக்கிப் போட்டு விட வேண்டும். இந்த தயக்கம் இருந்தால் எதுவும் சாதிக்க முடியாது.
நீங்கள் சாதிக்க நினைத்தை தொடங்கி விடுங்கள். விடாமல் முயற்ச்சியை தொடருங்கள். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு பெருமை அந்த முயற்சி தரும்.
மாநிலத்திலேயே முதல் மாணவனாக வருவேன் என்று முயற்ச்சியை தொடங்குங்கள். ஒரு வேளை உங்கள் முயற்சி போதுமானதாக இல்லாவிட்டால் பள்ளிக்காவது முதல் மாணவனாகவோ மாணவியாகவோ வருவீர்கள். அதுவும் பெருமை தானே.
அதை விடுத்து, நம்மால் எப்படி மாநிலத்திலேயே முதலாவதாக வர முடியும் என்று சந்தேகப் பட்டு, அது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை, நம்மால் முடியாது என்று தளர்ந்து இருந்து விட்டால் ஒரு பெருமையும் கிடைக்காது.
பாடல்
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
சீர் பிரித்தபின்
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
பொருள்
அருமை உடைத்து என்று = கடினமானது, சாதிக்க முடியாதது என்று
அசாவாமை வேண்டும் = அசாவாமை என்றால் தளர்ச்சி உறுதல், சந்தேகம் கொள்ளுதல்
பெருமை முயற்சி தரும் = முயற்சி பெருமையை தரும்
சரி, பல முறை பெரிதாக முயற்சி செய்தும் நல்ல பலன் கிடைக்காமல் போகிறதே. அதிர்ஷ்டம் ஒன்று வேண்டி இருக்கிறதே. அதை விதி என்றாலும் சரி, இறை அருள் என்றாலும் சரி, அதிர்ஷ்டம் என்றாலும் சரி...வெறும் முயற்சி மட்டும் பலன் தருமா ? தராவிட்டால் என்ன செய்வது ?
அதற்க்கும் வள்ளுவர் விடை தருகிறார்....
அதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்
Recently a book was publlished about the ingredients for business success. I was reading the review of that book. According to it, do you think optimists, pessimists or realists succeed the most in busines? Surprisingly, the answer is realists.
ReplyDelete1. Most of these types of books are based on a very very few sample, restricted to one geography on a particular time frame.
Delete2. Let us track the business which succeeded according to that book over next few years and see.
3. I am not defending Valluvar. I have read a book Built to Last. It was a sensation. The book claim to have distilled the secret sauce of business success. Many of the companies appeared in that book as successful companies vanished from the scene within a short span of time.
Awaiting to read next blog.
ReplyDelete