Pages

Tuesday, April 30, 2013

திருக்குறள் - காதலில், எது பெரிது ?


திருக்குறள் - காதலில், எது பெரிது ?


காதலில் மிகுந்த சுவை தரக் கூடியது எது ?

காதலியை சந்திப்பது, அவளுக்காக காத்திருப்பது, அவளுக்கு பரிசு வாங்கித் தருவது, அவளோடு பைக்கில் ஊர் சுற்றுவது, ஒரே இளநியில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது, ஓடாத படத்திற்கு ஓர டிக்கெட் போடுவது  என்று பல கூறுகள் இருந்தாலும் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று வள்ளுவர் ஒன்றை கூறுகிறார்...

அது சைட் அடிக்கும் காதலியின் கண்கள்

என்னது, பெண்கள் சைட் அடிப்பார்களா ? அதுவும் திருவள்ளுவர் காலத்து பெண்கள் சைட் அடிப்பார்களா ?  என்று நீங்கள் கேட்கலாம் ? ஆச்சரியப் படலாம்....

எனக்கு என்ன தெரியும்....வள்ளுவர் சொல்கிறார்....படியுங்கள்....அப்புறம் நீங்களே சொல்லுங்கள்....

பாடல்



கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் 
செம்பாக மன்று பெரிது.


பொருள்






கண் களவு = திருட்டுத்தனமாய் கண்ணால் 

கொள்ளுஞ் = பார்த்துக் கொள்ளும்

சிறுநோக்கங் = சிறிய நோக்கம் (glance )

 காமத்திற்  = காதலில்

செம்பாக மன்று = செம்பாகம் என்றால் சரி பாதி, அல்லது பெரிய பகுதி அன்று

பெரிது.= அதை விட பெரியது

அவள் செய்யும் எல்லாவற்றையும் விட இந்த திருட்டு தனமாய் ஒரு சின்ன லுக்கு  விடுவா பாருங்க, அதுதாங்க இந்த காதலில் பெரிய விஷயம் என்கிறார் தாடி வைத்த  வள்ளுவர்....

அவ யாரு, நம்ம பாட்டியோட, பாட்டியோட, பாட்டியோட ....பாட்டி...

இந்த பொண்ணுகளுக்கு இந்த லுக்கு எங்க இருந்து வந்ததுனு தெரியுதா....

அந்த காலத்து பிகருக படா கில்லாடியா இருந்திருக்காங்க....

கண் களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் = கண்ணால் களவு கொள்ளுவார்களாம். எதை ? காதலனின் மனதை. அவனை கேட்டா எடுத்துப் போகிறார்கள். களவாணி புள்ளைக.

 சிறு நோக்கிலேயே இவ்வளவு களவாணித்தனம் என்றால், பெரு நோக்காய் இருந்தால்......? தலைவர் அம்பேல்....

பெண்ணின் பெருந்தக்க யாவுள ? பெண்ணை விட பெருமையானது இந்த உலகத்தில் என்ன இருக்கிறது ? ஒன்றும் இல்லை.




2 comments:

  1. சிறு நோக்கம்- அன்ன ஒரு அருமையான வார்த்தை!

    இதை எல்லாம் படித்தால், எனக்கு வள்ளுவர் படத்தை மாற்றி வரைய வேண்டும் என்று தோன்றுகிறது. நாம் எல்லோரும், அவரை வெள்ளை தாடி வைத்தவராகவே கற்பனை செய்திருக்கிறோம். இப்படி ஜொள்ளு பற்றி அருமையாக எழுதியவரை, ஒரு கட்டுமஸ்தான இளைஞனாக, மீசை வைத்து, வேஷ்டி கட்டி, கையில் தடி பிடித்துக் கற்பனை செய்ய வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. முதலில் திருவள்ளுவர் பெயரை மாற்ற வேண்டும்....திருஜொள்ளுவர் என்று.

      அடுத்து உருவம். அதை மாற்றி எழுத , மாதிரிக்கு என்னிடம் ஒரு படம் இருக்கிறது...திருவள்ளுவருக்கு இணையாக ஜொள்ளு விடும் ஒருவர் படம் என்னிடம் இருக்கிறது....

      ஊரை சொன்னாலும் பேரை சொல்லக் கூடாது என்று சொல்லுவார்கள்....அவர் மதுரைக்காரர் என்று கேள்வி....

      Delete