திருக்குறள் - காதல் நோக்கு (கண்ணடிக்கிறா?)
காதலியின் பார்வை, என்ன செய்யும் என்று அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
மனதுக்குள் மலரள்ளித் தெளிக்கும்,
உடலெங்கும் உற்சாக நதி கரை புரண்டு ஓடும்,
அட்ரினலில் இரத்தம் கலக்கும், அடிவயிற்றில் கலவரம், காது நுனி சிவக்கும், உள்ளங்கை ஊற்றெடுக்கும், உடல் தூக்கத்தையும் பசியையும் நாடு கடத்தி இருக்கும்....ஓடுகின்ற இதயம் உசைன் போல்ட்டுக்கு சவால் விடும், தரை படாத கால்கள் நியுட்டனின் விதிகளை எள்ளி நகையாடும்....
அவள் நேராக பார்க்க மாட்டாள். ஓரக்கண்ணால ஒரு பார்வை. ஓரப் பார்வைக்கு இத்தனை உற்சாகம்...முழுப் பார்வையும் பார்த்தால்...யார் தாங்குவது ?
அப்படின்னு வள்ளுவர் சொல்லுறார்....
பாடல்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
பொருள்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் = நேருக்கு நேர், குறிப்பா பாக்க மாட்டாள்
ஒருகண் = ஒரு கண்ணை மட்டும்
சிறக்கணித்தாள் = சிறக்கணிதல் என்றால் சுருங்குதல். கண்ணை கொஞ்சம் அப்படி சுருக்கி, ஒரு கண்ணால
போல = அது கூட நிஜம் இல்ல, "போல" அது போல இருக்கும். அதுவான்னு தெரியாது
நகும் = சிரிக்கும், புன்னகை பூக்கும் (ஏன் சிரிக்க மாட்டீங்க, நாங்க படுற அவஸ்தை எங்களுக்குத்தானே தெரியும் என்று வள்ளுவர் அங்கலாய்கிறார்....)
இதைப் படித்தால் நமக்கு ஒரு புன்னகை வருகிறது! அதற்கு மேலே உன் வர்ணனை விளக்கம் வேறே! ஆஹா!
ReplyDelete