Pages

Thursday, May 30, 2013

இரணியன் வதம் - நரசிங்கம் வளருதல்

இரணியன் வதம் - நரசிங்கம் வளருதல் 



நரசிங்க சிங்கம் வளர்ந்து கொண்டே போகிறது .  அதன் வயறு சத்ய லோகம் வரி போயிற்று. சத்ய லோகத்தில் பிரம்மா அமர்ந்து இருக்கிறார். உட்கார்ந்து இருக்கும் அவரை அப்படியே அந்த வயறு தூக்குகிறது. பிரம்மாவுக்கு தோன்றுகிறது, நாம் உண்டான போது திருமாலின் வயிற்றில் இருந்துதான் வந்தோம்....அது மீண்டும் நடக்கிறதா என்று சந்தேகம் வந்ததாம்...

பாடல்

'மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத்  தோன்றினானால். 


பொருள் 



மன்றல் அம் துளப மாலை = மணம் கமழும் துளசி மாலை அணிந்த


மானுட = மனிதனும்

மடங்கல் = சிங்கமும் ஒன்றாகச் சேர்ந்த அந்த உருவம்

வானில் சென்றது = வானில் வளர்ந்து சென்றது

தெரிதல் தேற்றாம் = முழுதும் அறிய முடியவில்லை. அத்துணை பிரமாண்டம்.

சேவடி = சிவந்த அடிகள்

படியில் தீண்ட = தரையை தீண்ட

நின்றது ஓர் பொழுதின் = நின்ற அந்த நேரத்தில்

அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் = அண்டத்தின் உச்சியில்  இருந்த பிரம்மா

அன்று அவன் உந்தி வந்தானாம் = முன்பொருநாள் திருமாலின் உந்தியில் வந்தது போல்

எனத்  தோன்றினானால். = தோன்றியது

கால் தரையில் .

வயறு சத்ய லோகத்தில்....எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான உருவம்.

அந்த உருவம் என்ன செய்தது தெரியுமா ?

1 comment:

  1. இது கொஞ்சம் ரொம்பவே over ஆ தெரியல?

    ReplyDelete