Pages

Sunday, June 2, 2013

இரணியன் வதம் - தாயை போன்ற கருணையுடன்

இரணியன் வதம் - தாயை போன்ற கருணையுடன் 


ஒரு தாய் எவ்வளவு கருணையுடன் அவள் கருவை சுமக்கிறாள். வரப் போவது ஆணா , பெண்ணா, கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா என்று ஒன்றும் தெரியாது. இருந்தாலும், அந்த பிறக்காத உயிர் மேலும் அவள் அளவற்ற அன்புடன் தன உதிரத்தை தந்து வளர்கிறாள்.

கடினமாக இருக்கிறது என்று அவள் குறை மாதத்தில் குழந்தையை வெளியே தள்ளி விடுவதில்லை. தகுந்த காலம் வரை, தன் வயிற்றில் வைத்திருந்து பின் பிறப்பிக்கிறாள்.

அது போல், அந்த நரசிம்மம், நல்லவர்களை கருணையோடு ஒரு தாயை போல வைத்திருந்து தந்தது.

பாடல்

'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு ? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை,
அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை, அந் நாள், 
தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின்.

பொருள் 



'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு ? = நன்மைகளை தொடர்ந்து செய்பவர்களுக்கு கேடு வருமா ?

நான்முகத்தோன்  ஆதி = பிரம தேவன் முதலாக

தொன்மையின் தொடர்ந்த = ஆதி காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த

வாய்மை = உண்மையையும் 

அறத்தொடும் = அற நெறிகளையும்

 துறந்திலோரை, = துறக்காதவர்களை

அன்வயித்து = தொகுத்து

ஓரும் = ஆராயும்

தீய அவுணர் அல்லாரை = தீய அரக்கர் அல்லாதவர்களை

அந் நாள் = அந்த நாள்

தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது = தன் வயிற்றில் வைத்து தந்தது

அச் சீயம் = அந்த சிங்கம் 

தாயின். ஒரு தாயை போல


1 comment:

  1. Sudden change of tone from being a ferocious lion to a kind lion?!? Surprising.

    ReplyDelete