Pages

Wednesday, June 12, 2013

திருக்குறள் - செல்வம் சேமித்து வைக்கும் இடம்

திருக்குறள் - செல்வம் சேமித்து வைக்கும் இடம் 


பணத்தை எங்கே போட்டு வைக்கலாம் ? வங்கியில், கம்பெனி முதலீட்டில் (shares ), தங்க நகைகளில், நிலத்தில், வீட்டில் என்று பல இடங்களில் பணத்தை முதலீடு செய்யலாம்.

வள்ளுவர் சொல்கிறார் , பணத்தை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்று.

ஏழைகளின் வயிற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமாம்.

முதலில் பாடலைப் பார்ப்போம்,

பாடல்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்





அற்றார் = அற்றவர், பொருள் அற்றவர்

அழிபசி = பசி தெரியும். அது என்ன அழி பசி ? அழித்த பசி, அழிக்கின்ற பசி,  அழிக்கும் பசி. எதை அழிக்கும் ?

நல்லன எல்லாவற்றையும் அழிக்கும்.  பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்களே

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

இத்தனையும் அழிக்கும் பசி.

தீர்த்தல் = அந்த பசியை தீர்த்தல். தீர்ந்து போக வேண்டும். ஒண்ணும் மிச்சம் இருக்கக் கூடாது. 

அஃதுஒருவன் = அது ஒருவன்

பெற்றான் பொருள்வைப் புழி = பெற்ற பொருளை வைக்கும் இடம்.

பெற்ற பொருள் என்றால் என்ன? பெறாத பொருளை வைக்க முடியுமா ?

பெற்ற பொருள் என்றால், பசியை தீர்த்த பின் அந்த பொருள் மீண்டும் கொடுத்தவனுக்கே  வந்து உதவும் என்பதால் பெற்ற பொருள் என்றார். 

கொடுங்கள். வரும்.

4 comments:

  1. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று. இது நாள் வரை எந்த பத்து என்று யோசித்தது கூட இல்லை. நன்றி. ஒன்பதும் சாதாரணமாக எழுதி விட்டு பத்தாவதுக்கு மட்டும் ஒரு அருமையான ADJECTIVE!!!!.
    பெற்ற பொருள் விளக்கம் நன்று.

    ​​

    ReplyDelete
  2. பெற்றான் பொருள் என்கிறார், பெற்ற பொருள் அல்ல.

    தாளாண்மை என்றால் என்ன?

    ReplyDelete
  3. புழி என்றால் என்ன?

    ReplyDelete