Pages

Friday, June 28, 2013

முறிந்த வில்கள் - பிள்ளை முன் இட்டது பேதைமை

முறிந்த வில்கள் - பிள்ளை முன் இட்டது பேதைமை

சீதையை மணமுடிக்க வேண்டும் என்றால் சிவனின் வில்லை வளைக்க வேண்டும் என்பது நிபந்தனை. இராமன் எழுகிறான் அதை வளைக்க.

அங்குள்ள பெண்களுக்கு எல்லாம் ஒரே பதட்டம். ஒரு வேளை இராமன் இந்த வில்லை வளைக்கா விட்டால் ? இந்த இராசாவுக்கு (ஜனகனுக்கு) அறிவே இல்லை. மாப்பிளைய பிடிசிருஞ்சா பேசாம மணம் பேச வேண்டியதுதானே, இவ்வளவு பெரிய வில்லை எடுத்து இந்த சின்ன பிள்ளையின் முன் போட்டு இதை வளை என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று ஜனகனை மக்கள் திட்டுகிறார்கள்.

பாடல்

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
"கொள்" என் முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை' என்பார்.

பொருள்





வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் = வள்ளலாகிய ஜனகன் இந்த திருமணத்தை விரும்பினால் என்றால்.


"கொள்" என் முன்பு கொடுப்பதை அல்லால் = இந்தா, இந்த பெண்ணை பெற்றுக் கொள், என்று கொடுப்பதை விட்டுவிட்டு

வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து = ஆகாய கங்கையை தலையில் அணை கட்டி தடுத்தவனின் (சிவனின்) வில்லை எடுத்து

இப் பிள்ளை முன் இட்டது பேதைமை' என்பார்= இந்த சின்ன பிள்ளையான இராமனின் முன் போட்டது பேதைமை (மடமை).

1 comment:

  1. what a nice poem. the mood of the general public expressed in a beautiful way.

    ReplyDelete