Pages

Saturday, June 22, 2013

சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி

சரஸ்வதி அந்தாதி - கல்லும்   சொல்லாதோ கவி 


கம்பர் எழுதியாதக சொல்லப் படும் நூல்.

முப்பது பாடல்களை கொண்டது.

அறிவுக் கடவுளான சரஸ்வதியின்  மேல் பாடப் பட்டது.

உண்மையிலேயே சரஸ்வதி நேரில் வந்து அருள் வழங்கினால் ஒருவன் எவ்வளவு சந்தோஷப் படுவானோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் கொப்பளிக்கும் பாடல்கள்.

கம்பர் சொல்கிறார், நான் எப்படி இவ்வளவு அழகான கவிதைகள் எழுதுகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள் அல்லவா ? இது என்ன ஆச்சரியம், அவளை இரவும் பகலும் எந்நேரமும் துதித்தால், ஒரு கல்  கூட கவி பாடும் என்கிறார்.

பாடல்


படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

பொருள் 



படிக நிறமும் = படிகம் போன்ற நிறமும்  (crystal )

பவளச் செவ்வாயும் = பவளம் போல் சிவந்த உதடுகளும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் = சிறந்த மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற கையும்

 துடியிடையும் = சிறிய இடையும்

அல்லும் = இரவும்

பகலும் = பகலும்

அனவரத முந்துதித்தால் = அனவரதமும் துதித்தால் = எந்நேரமும் துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி = கல் கூட சொல்லுமே கவி

உங்களுக்கு கவிதை எழுத ஆசையா ?


2 comments:

  1. சரஸ்வதி அந்தாதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி! :)

    ReplyDelete
  2. முப்பது பாடல்கள; vilakkam

    ReplyDelete