Pages

Tuesday, July 16, 2013

தாயுமானவர் - இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை

தாயுமானவர் - இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை


இந்த ஆன்மாவை ஆண்டவன் படைக்கவில்லை. எப்போது இறைவன் தோன்றினானோ அப்போதே, அதே சமயத்தில் ஆன்மாக்களும் தோன்றின. ஆன்மாவும் இறைவனும் ஒன்றல்ல. ஆனால், இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றியவை.

பாடல்

என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை
இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே
பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும்
பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே.


சீர் பிரித்த பின்

என்று உள்ளை நீ அன்று உள்ளம் யாம் என்பதனை
இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே
பொன்றிடச் செய்ய வல்லவன் நீ எம்மை படைக்கும் 
பொற்புடையாய் என்னின் அது பொருந்திடாதே 

பொருள்




என்று உள்ளை நீ = என்று நீ இருந்தாயோ

அன்று உள்ளம் யாம் = அன்று நாங்களும் இருந்தோம்

என்பதனை = என்பதனை

இது நிற்க = இந்த உண்மை நிற்க

எல்லாம் தாம் இல்லை என்றே = எல்லா உயிர்களும் நீ இல்லை என்றே

பொன்றிடச் செய்ய வல்லவன்  = தோன்றிடச் செய்பவன் நீ

நீ எம்மை படைக்கும் = நீ எம்மை படைக்கும்

பொற்புடையாய் என்னின் அது பொருந்திடாதே = பொற்பு என்றால் அழகு என்று பொருள். இங்கு பொறுப்பு என்பதன் திரிபு என்று கொள்ளலாம். இறைவன் தான்  நம்மை படைத்தான் என்றால் அது பொருந்தாதே என்கிறார்

மிக ஆழமான பாடல். நடுவில் ஒரு வரி கொஞ்சம் சங்கடப் படுத்துகிறது. அர்த்தம் சரிதான என்று  தெரியவில்லை. தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கிடைத்தால் மீண்டும் இந்த பாடலை எழுதுவேன்



No comments:

Post a Comment