Pages

Sunday, July 28, 2013

திருக்குறள் - வானம் ரொம்பத் தூரம் தூரம் இல்லை

திருக்குறள் -  வானம் ரொம்பத் தூரம் தூரம் இல்லை  


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

சந்தேகம் இல்லாத   மனிதன் உண்டா உலகில் ?

யாருக்குத்தான் சந்தேகம்  இல்லை ? எதில்தான் இல்லை ?

இறைவன் இருக்கிறானா இல்லையா ? இந்த உலகைப்     யார் படைத்தது யார் ? 

மறு பிறப்பு  உண்டா ? பாவ புண்ணியம் என்று ஒன்று உண்டா ?

சுவர்க்கம் நரகம்  உண்டா ?

இப்படி    ஆயிரம் சந்தேகம் நம்மை நாளும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன.

இந்த சந்தேகங்களில் இருந்து எப்படி தெளிவு பெறுவது ?

யாரைக் கேட்டால்  இந்த சந்தேகங்கள் தீரும் ? எதைப்  படித்தால் இந்த சந்தேகங்கள் போகும் ?

இப்படி சந்தேகம் நீங்கி தெளிவு  பெற்றவருக்கு அந்த வானகம் இந்த பூமியை விட   பக்கத்திலேயே இருக்கும்.

ஐயம் நீங்கினால் மட்டும்  போதாது , தெளிவும் பிறக்க வேண்டும்.


பாடல்    

ஐயத்தின் = சந்தேகத்தின் 

 நீங்கித் தெளிந்தார்க்கு = அதை விட்டு நீங்கி, தெளிவு அடைந்தவர்களுக்கு 

 வையத்தின் வானம் = வையத்தை விட வானம் 

 நணிய துடைத்து. = நணிய   என்றால் அருகில் . நணியதுடைத்து  என்றால் அருகில்   வந்தது, இருக்கும், என்று. பொருள் நணிய  என்ற சொல்லில் இருந்து வந்தது நண்பன். 

அவர்கள் இந்த மண்ணிலேயே சொர்கத்தை காண்பார்கள் என்று பொருள். 

சந்தேகத்தை தீருங்கள். தெளிவு பெறுங்கள். வானம்  உங்கள் வசப்படும். 

 வள்ளுவர் கூறுகிறார் அப்படி சிலர் தெளிவு பெற்று இருக்கிறார்கள் என்று.

உங்களுக்கும் அந்த தெளிவு பிறக்கட்டும்.

ஒவ்வொரு நாளும் தெளிவை நோக்கி நீங்கள்  முன்னேறுகிரீர்ளா என்று யோசியுங்கள்.



4 comments:

  1. தெளிவு பெறுவது எப்படி என்று வள்ளுவர் எழுதியிருக்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. ஆம். சொல்லி இருக்கிறார்

      Delete
    2. அருமையான தொகுப்பு உங்களுடையது. அபிராமி அந்தாதியினை தேடும் பொழுது கண்டு கொண்டேன். இங்கே ஒரே கல்லில் பல மாங்காய்கள் கிடைத்துள்ளன. நன்றி.

      Delete
    3. காய்கள் தானா ?

      Delete