Pages

Wednesday, July 17, 2013

திருக்குறள் - புகழும் இகழும்

திருக்குறள் - புகழும் இகழும்

நம்மை யாராவது இழிவாகப் பேசிவிட்டால், தரக் குறைவாகப் பேசிவிட்டால் நமக்கு அவர்கள் மேல் எவ்வளவு கோபம் வரும். பதிலுக்கு நாம் அவர்களை பேசுவோம், எரிச்சல் அடைவோம், கோபம் கொள்வோம், எப்படியாவது அவர்களுக்கு ஒரு துன்பம் தர வேண்டும் என்று நினைப்போம்....

எப்போதாவது, மற்றவர்கள் நம்மை இகழ்வதர்க்குக் காராணம் நாம் தான் என்று நினைத்தது உண்டா ?

வள்ளுவர் கூறுகிறார்

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?.

மற்றவர்களால் இகழப் படாமல் வாழ வேண்டும் என்றால் அதற்க்கு ஒரே வழி மற்றவர்களால் புகழப் பட வாழ்வதுதான்.

நீங்கள் புகழோடு வாழவில்லை என்றால், நீங்கள் இகழோடு வாழ சாத்தியக் கூறுகள் இருக்கிறது.

நீங்கள் எபோதாவது இகழப் பட்டால், அதற்கு காரணம் புகழோடு வாழாத நீங்கள் தானே அன்றி மற்றவர்கள் இல்லை என்று மனதில் கொள்ளுங்கள்.

புகழ் வர வர இகழ் தேயும்.

பொருள்

புகழ்பட வாழாதார் = மற்றவர்கள் புகழும் படி வாழாதவர்கள்

 தம்நோவார் தம்மை = தம்மை இழிவாக பேசுபவர்களை

இகழ்வாரை நோவ தெவன்? = அப்படிப் பட்டர்வகளை நொந்து என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை .


சரியாவே படிக்க மாட்டேன் என்கிறான் என்ற இழிச் சொல் - மாநிலத்திலேயே முதல்வனாய் வந்தால் தானே மறைந்து போகும்.

புகழோடு வாழுங்கள். இழிச் சொற்கள் தானே உங்களை விட்டு விலகிப்  போய் விடும்.



3 comments:

  1. அது சரிதான், ஆனால் புகழோடு வாழ்வது எப்படி? நாம் எல்லாம், சும்மா ஆபீசுக்குப் போய் வந்து வாழ்க்கையைக் கழித்து விடுகிறோம். இதில் புகழ் எப்படி வரும்?!?

    ReplyDelete
  2. உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது Mr.Dilip. சும்மா ஆபீஸ் போய் வந்தால் புகழ் வராது. புகழ் வரும் செயல்களை செய்வதால் புகழ் வரும்.

    ReplyDelete