Pages

Wednesday, August 14, 2013

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?

குசேலோபாக்கியானம் - இப்படியும் ஒரு பெண்ணா ?


குசேலரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது எனக்கு.

வீட்டில் வறுமை. 27 பிள்ளைகள். அவர் ஒண்ணும் பெரிதாக வேலைக்குப் போய் சம்பாதித்தாகத் தெரியவில்லை.

பிள்ளைகள் அது வேணும், இது வேணும் என்று நாளும் கேட்டு தொந்தரவு செய்கின்றன.

சாதரணாமாக ஒரு பெண் என்ன செய்வாள் ?

கணவனை முதலில் திட்டித் தீர்பாள். அடுத்தது பிள்ளைகள் மேல் எரிந்து விழுவாள். ஏதோ பிள்ளைகள் பெறுவதும் , கணவனை குறை கூறுவதும் தான் தன்  முழு நேர வேலை என்று நினைத்துக்கொண்டு.

குசேலரின் மனைவி....

....வறுமை என்ற கடலில் அழுந்தினாலும், தன் கணவனை வெறுத்து பேச மாட்டாள், அவன் மேல் ஒரு பழியும் சொல்ல மாட்டாள், பிள்ளைகளை ஒரு சிறிதும் கடிந்து பேச மாட்டாள். இந்த வறுமை கடலை எவ்வாறு கடப்பது என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பாள்.....

பாடல்


இவ்வாறு மிடியென்னும் பெருங்கடலுள்
          அழுந்தியுந்தற் கினிமை சான்ற
செவ்வாய்மை அந்தணனை வெறுத்துரையாள்
          அலர்மொழிகள் சிறிதும் செப்பாள்
துவ்வாமை மைந்தர்கள்பால் மறந்துமியற்
          றாளவள்தன் சுகுணம் என்னே 
எவ்வாறித் துயர்க்கடல்நீந் துவமெனுமோர்
          எண்ணமுளத் தென்றும் உண்டால்.

பொருள் 




இவ்வாறு = இவ்வாறு

மிடியென்னும் = வறுமை என்னும்

 பெருங்கடலுள் = பெரிய கடலுள்

அழுந்தியுந் = அழுந்தியும்

தற் கினிமை = தனக்கு இனிமை

சான்ற = உடைய

செவ்வாய்மை அந்தணனை = செம்மையான, வாய்மை உள்ள அந்தணனை (கணவனை )

வெறுத்துரையாள் = வெறுத்து ஒரு வார்த்தை பேச மாட்டாள்

அலர்மொழிகள் = பழிச் சொற்கள்

சிறிதும் செப்பாள் = கொஞ்சம் கூட பேச மாட்டாள்

துவ்வாமை = வறுமையில் வாடும், பசியால் வாடும் என்பது சாலப் பொருந்தும் 

மைந்தர்கள்பால் = பிள்ளைகள் மேல் 

மறந்துமியற்றாளவள் = மறந்தும் கூட கொடிய சொற்களை சொல்ல மாட்டாள் 

தன் சுகுணம் என்னே = அவளுடைய நல்ல குணம்தான் என்னே 

எவ்வாறித் துயர்க்கடல்நீந் துவமெனுமோர் = எவ்வாறு இந்த துயரக் கடலை நீந்துவோம் என்னும் ஓர்

எண்ணமுளத் தென்றும் உண்டால். = எண்ணம் உள்ளத்தில் என்றும் உண்டு

அமைதியே வடிவாய் இருந்திருப்பாள் போல் இருக்கிறது 

கொடுத்து வைத்த மகரசான் 

4 comments:

  1. From my point of view she (what is her name by the way?)was the worst house wife of all time.

    1. when her husband is unemployed she got 27 kids. Atrocious.

    2.she didnt motivated or advised her husband to go for a job and support the family. ( போய் சம்பதிசிக்கிட்டு வா இல்லைனா நான் என் அம்மா வீட்டுக்கு போறேன் என்று கிளம்பாமல் அவனோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு இருந்திருக்கிறாள்.

    3.she didnt brought up her children properly. the first child must be atleast around 27 years old if she had one child every year. At least half a dozen children must be grown up and able to support the family. what were they doing in such a poverty?
    She may not be அமைதியே வடிவான பெண் but a mental case.

    ReplyDelete
  2. too premature comment. Wait till the end. She did solve the problem. They became the richest family in the village. She told the way to solve the poverty problem.....

    ReplyDelete
    Replies
    1. I'm eagerly waiting to know how she did solve the problem!!!!
      Thanks for highlighting this poem..

      Delete
  3. குசேலருக்கு பணம் சம்பாதிக்க வேலை வெட்டி இல்லையா?

    ReplyDelete