Pages

Monday, August 5, 2013

இராமாயணம் - இராவணன் தன் பெருமை கூறல்

இராமாயணம் - இராவணன் தன்  பெருமை கூறல் 


இராவணன் சீதையிடம் தன் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகிறான்.

நம் அற நூல்கள், தற்பெருமை பேசுவது தற்கொலை செய்வது கொள்வதற்கு ஒப்பாகும் என்று கூறுகின்றன.  இராமாயணத்தில், அநேகமாக எல்லா பாத்திரங்களும் தற்பெருமை பேசுகின்றன...இராமன் உட்பட.

இராவணன் தன் பெருமைகளை கூறுகிறான் இங்கே.....

நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவரே;
சொல் பகும், மற்று, அவன் பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய நிதியம் கையன;
பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர்

பொருள்




நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவரே = அவன் அரண்மனை வாசலில் கால் கடுக்க நிற்பவர்கள்,  வேறு யாரும் அல்ல,  தேவர்கள்.


சொல் பகும் = சொற்கள் சோர்ந்து போகும்

மற்று, அவன் பெருமை சொல்லுங்கால் = அவனுடைய பெருமையை சொல்லப் போனால்

கற்பகம் முதலிய நிதியம் கையன = கற்பக மரம் போன்ற செல்வங்கள் அவன் கையில் இருக்கின்றன

பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர் = பெருமையை தன்னகத்தே கொண்ட, கடல் சூழ்ந்த இலங்கை அவன் வாழும் நகரம்.

இராவணன் பெண்ணின் மனதை புரிந்து கொண்டான் இல்லை. செல்வமும் பலமும் இருந்தால்  எல்லா பெண்களும் தன் பின்னால் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தான். பெண்ணின் மனம் அன்பிலும் காதலிலும் வயப்படுமே தவிர செல்வத்திற்கும், வீரத்திற்கும் அடி பணிவது இல்லை.

இராவணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்....சீதையின் மறு மொழி என்ன தெரியுமா ?



2 comments: