இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்
நம் மனம் அல்லது உயிர் எத்தனையோ விஷயங்களுக்கு ஆசைப் படுகிறது. மனம் விரும்பும் விதம் எல்லாம் உடல் சென்று அது வேண்டும் இன்பங்களை புலன்கள் மூலம் பெற்று மனம் மகிழ்ச்சி அடைய உதவுகிறது.
இதைப் பார்த்த கம்பனுக்கு ஒன்று தோன்றியது.
மக்கள் எல்லாம் உயிர் போலவும்,தசரதன் உடல் போலவும் தோன்றியது.
உயிர் வேண்டியதை எல்லாம் உடல் தேடித் பிடித்து அது அனுபவிக்கத் தருவதைப் போல தசரதன் மக்களுக்கு சேவை செய்தான்.
பாடல்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.
பொருள்
வயிர = வைரம் வைத்து செய்யப் பட்ட
வான் பூண் அணி = உயர்ந்த பூண் கொண்ட அணிகலன்களை அணிந்த
மடங்கல் மொய்ம்பினான் = சிங்கம் போன்ற உடலைக் கொண்டவன்
.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் = எல்லா உயிர்களையும் தன் உயிர் போல நினைத்து காப்பதால்
செயிர் இலா உலகினில் = குற்றம் இல்லாத இந்த உலகில்
சென்று. நின்று. வாழ் = சென்று நின்று வாழும்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் = எல்லா உயிர்களும் வாழும் உடம்பு போல ஆயினான்
No comments:
Post a Comment