திருக்குறள் - பரிமேலழகர் உரைக்கு உரை
இந்திரன் முதலிய இறைவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.
மேலே கூறப் பட்டது பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய முன்னுரையின் .
ஒரு பகுதி. ஏதாவது புரிகிறதா ? ஆராய்ச்சியாளர்களுக்கு எழுதப் பட்டது பரிமேல் அழகர் உரை. கொஞ்சம் எளிமை படுத்திப் பார்க்கலாம்.
வாழ்வின் நோக்கம் என்ன ?
முடிவே இல்லாத இன்பம் பெறுவது, அழிவே இல்லாத முக்தி பெறுவது, இறைவனின் திருவடியை அடைவது....இதுதானே உயிர்களின் நோக்கமாகவும் இருக்கும் ?
இதை அடைவதற்கு, பெரியவர்கள் நான்கு உறுதியான வழிகளை சொல்லுகிறார்கள்.அது அறம் , பொருள், இன்பம், மேலும் வீடு ஆகும்.
இதில் அறம் , பொருள் மற்றும் இன்பம் என்பது நமக்குப் புரிகிறது. அது என்ன வீடு ?
வீடு என்பது நம் சிந்தனையும், மொழியும் செல்லாத இடம். நம்மால் அதை பற்றி சிந்திக்கவோ, சொல்லவோ முடியாது. சிந்திக்க முடியாத ஒன்றைப் பற்றி எப்படி சொல்லுவது ?
ஒரு உதாரணம் சொல்லி விட்டு பின் விளக்கம் அறியலாம்.
நீங்கள் புதிதாக ஒரு ஊருக்குப் போய் இருகிறீர்கள். உங்கள் நண்பரை
பார்க்கலாம் என்ற ஆவலோடு சென்று இருகிறீர்கள். நண்பரும் வீட்டு விலாசம், அருகில் உள்ள முக்கிய இடங்கள் இவற்றை எல்லாம் சொல்லி இருக்கிறார். நீங்களும் அவர் இருக்கும் இடம் வரை வந்து விட்டீர்கள்.ஆனால் வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.
அந்தப் பக்கம் வந்த ஒருவரிடம் உங்கள் நண்பரின் விலாசத்தைக் காட்டி அந்த வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்கள்.
அவர், "ஓ , இந்த வீடா, இப்படியே நேராகப் போய் , இடது புறம் திரும்பினால் ஒரு பலசரக்கு கடை வரும், அங்கிருந்து நாலாவது வீடு இந்த விலாசம்" என்று சொல்கிறார்.
நீங்களும் "என் நண்பரின் வீட்டை காண்பித்ததற்கு ரொம்ப நன்றி " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறீர்கள்.
வந்தவர்,வீட்டை காட்டவில்லை, நண்பரின் வீட்டுக்குப் போகும் வழியை சொன்னார். அந்த வழியில் போனால் நண்பரின் வீடு வரும். நண்பரின் வீடு எப்படி இருக்கும், பெரிதா, சின்னதா, தனி வீடா, அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு வீடா .... கிழக்கே பார்த்ததா, மேற்க்கே பார்த்ததா ....ஒன்றும் தெரியாது.ஆனால், நண்பரின் வீட்டை கண்டு பிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது.
அதே போல
அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.

அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமை உடையதால் , துறவறம் ஆகிய காரண வகையால் அதை கூற முடியுமே அன்றி அதை இலக்கணம் மாதிரி எடுத்து உரைக்க முடியாது. அறம் ,பொருள் , இன்பம் என்று சொல்லி விட்டு அடுத்து துறவறம் பற்றி சொல்லுகிறார்.துறவறம் வீடு பேறு பெரும் வழி. அந்த வழியே போனால் வீடு பேற்றை அடையலாம்.
எனவே,திருக்குறளில் அறம் , பொருள், இன்பம் உண்டு அதன் பின் துறவறம் இருக்கிறது.
எங்கே இருக்கிறது ? அறம் , பொருள், இன்பம் இந்த மூன்று பால் தானே இருக்கிறது. துறவறப் பால் என்று ஒன்று இருக்கிறதா என்ன ?
பார்ப்போம்.
சுவாரசியமான சிந்தனை. ஆனால், அறம் , பொருள், இன்பம் என்பவை மூன்றும் முக்தி அடையத் தனித்தனி வழிகள? அப்படியானால், இன்பத்தால் எப்படி முக்தி அடைவது? பொருள் சேர்ப்பதால் எப்படி முக்தி அடைவது?
ReplyDeleteஅறம் , பொருள், இன்பம் என்பவை மனிதர் துய்க்க உகந்தவை. அவைகளைத் துய்த்த பிறகு வருவது துறவும், வீடுபேறும்.
பரிமேலழகர் உரைக்கு உரை சொல்லும் புத்தகம் ஏதேனும் உள்ளதா?....
ReplyDeleteCan i get in touch with you??.. 9840108759
ReplyDeleteKavithaikarthik91@gmail.com