குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?
காதல் - உயிர்களின் ஜீவ நாடி.
காதலுக்காக ஏங்குவதும், காதலைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்பாத உயிர்கள் இருக்குமா என்ன ?
ஆனால், சுத்தி முத்தும் பார்த்தால் அப்படி காதலுக்காக உருகுபவர்கள் நிறைய இருப்பது மாதிரி தெரியவில்லை.
பணம், பொருள், பதவி, அறிவு என்று பலவற்றை தேடுபவர்கள்தான் அதிகமாகத் தெரிகிறார்கள்.
அன்பு யாருக்கு வேண்டும் ?
தான் அன்பு செலுத்துபவர்களின் வரும் வழி பார்த்து , விழி சோர நிற்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ?
மழை தேடும் மண்ணைப் போல மனம் தேடும் மக்கள் எத்தனை ?
காதலிக்காக காதலனுக்காக கால் கடுக்க நடந்தவர்கள், காத்துக் கிடந்து கால் தேய்ந்தவர்கள் எவ்வளவு பேர் ?
பாடல்
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
பொருள்
காலே பரிதப் பினவே = (நடந்து, நடந்து, காத்து காத்து கிடந்து ) கால்கள் களைத்தன
கண்ணே = என் கண்களோ
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே = அவன் (அவள்) வரும் வழி பார்த்து பார்த்து ஒளி இழந்தன
அகலிரு விசும்பின் = அகன்ற பெரிய இந்த உலகில்
மீனினும் = விண் மீன்களை விட
பலரே = பல பேர் உள்ளனர்
மன்ற = நிச்சயமாக
இவ் வுலகத்துப் பிறரே = இந்த உலகத்தில் மற்றவர்களே. அதாவது அன்புக்காக உருகாத மற்றவர்கள் ரொம்பப் பேர் இருக்கிறார்கள்.
என்ன செய்ய ?
சரியான புலம்பல்தான்!
ReplyDelete