திருக்குறள் - பெண் விழைவான்
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
முதலில் பரிமேலழகர் உரையை பார்ப்போம்
பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்;
பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.
ஏன் நாணம் தரும் ?
எப்பப் பார்த்தாலும் பெண்டாட்டி பின்னாடியே சுத்திக் கொண்டு இருந்தால் , செல்வதை காப்பது, செல்வதை அனுபவிப்பது , செல்வதை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்ய முடியாது. எனவே நாணம் தரும்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? இந்த செல்வம் எல்லாம் அவன் மனைவி சாமர்த்தியதால் வந்தது, இவனுக்கு ஒண்னும் தெரியாது என்று நினைப்பார்கள். அதுவும் நாணம் தரும்.
"பெண்'" என்ற வார்த்தைக்கு ஏன் "மனைவி" என்று கொள்ள வேண்டும்? வள்ளுவர் பெண் என்றுதானே எழுதியிருக்கிறார்? அவருக்கு இருந்த தைரியம் பரிமேலழகருக்கு இல்லை போலும்; RSக்கும் இல்லை!
ReplyDeleteஎனக்கு என்னமோ அர்த்தமே வேறு என்று படுகிறது.
ReplyDeleteஆண், ஆணாக, கம்பீரமாக, ஆணின் கடமைகளை செய்யாமல், பெண்கள் பின்னாலேயே சுற்றிக்கொண்டு வேறு எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் அது நாணத்துக்குரிய செயல் என்பதாகத்தான் குரள் அர்த்தம் தொனிக்கிறது. மனையாள் என்ற வார்த்தையே குறளில் இல்லை
முழுமையான விளக்கம் இல்லாமல், சிறு பகுதி விளக்கப்பட்டதால் சிறு குழப்பம் உள்ளதை போல் தோன்ற வாய்ப்பிருக்கிறது,
ReplyDeleteசிறிது விரிவான விளக்கம் இந்த இணையத்தில் காண முடிகிறது http://www.kuralthiran.com/KuralAthikaaraVilakkam/091PenVazhiChearal.aspx