Pages

Saturday, November 2, 2013

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு


பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சில சமயம் நல்ல விதையை விதைத்தாலும், விதைத்த இடம் பழுதாக இருந்தால் செடி முளைக்காது. அது போல முட்டால்களிடமும்,  தீயவர்களிடமும் நல்லததை சொன்னாலும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று.


பாடல்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


பொருள்





பூவாதே = பூ பூக்காமலே

காய்க்கும் = காய் கனிகள் தரும்

மர முமுள = மரங்களும் உள்ளன

மக்களுளும் = மனிதர்களிலும்

ஏவாதே = சொல்லாமல்

நின்று உணர்வார் தாமுளரே = தாமாகவே அறிந்து கொள்ளும் அறிவு உள்ளவர்களும் உண்டு

தூவா விரைத்தாலும் = தூவி விதைத்தாலும்

நன்றாகா வித்தெனவே = நன்றாக விளையாத விதையைப் போல

பேதைக்கு = பேதைகளுக்கு

உரைத்தாலுந் தோன்றா துணர்வு = சொன்னாலும் அறிவு வராது.

தீயவர்களை பார்த்து, அவர்களோடு பழகி, அவர்களை நல் வழிப் படுத்த நினைப்பவர்களுக்கும், அப்படி நினைப்பவர்களுக்கு துணை போபவர்களுக்கும்  அவ்வை சொல்லும் அறிவுரை இது.




1 comment:

  1. இந்த உலகில் சிலர் குதர்க்க வாதம் பண்ணுவதை நாம் கண்டதில்லையா? அதேதான் அவ்வையாரும் சொல்கிறார்.

    ReplyDelete