நன்னெறி - அழும் கண்
உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.
வள்ளுவர் சொன்ன மாதிரி,
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தன் நோய் போல் போற்றாக் கடை
பாடல்
பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
பொருள்
பெரியவர் = கற்றறிந்த பெரியவர்கள்
தம்நோய் போல் = தனக்கு வந்த நோய் போல
பிறர் நோய் = பிறரின் நோயை
கண்டு உள்ளம் = கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க = நெருப்பில் இட்ட வெண்ணை போல உருகுவர்.
தெரி இழாய் = தேர்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே
மண்டு பிணியால் = அதிகாமான நோயால்
வருந்தும் பிற உறுப்பைக் = வருந்தும் மற்ற உறுப்புகளை
கண்டு = கண்டு
கலுழுமே கண் = கலங்கும் கண்
அருமையான பாடல். என்ன ஒரு நல்ல உவமைக் கற்பனை! நன்றி.
ReplyDelete