Pages

Monday, March 3, 2014

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி

திருப்புகழ் - விடத்தை வென்றிடும் படை விழி



குடத்தை வென்றிடு கிரியென எழில்தள
    தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
    குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு வடிவேலா
   குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
    அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
    குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி  மருகோனே

சீர் பிரித்த பின் 

குடத்தை வென்றிடும் கிரியென எழில் தள தளத்த 
கொங்கைகள் மணி வடம் அணி சிறு குறத்தி 
கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடிவேலா 
குரை கருங்கடல் திரு அணை என முன்னம் 
அடைத்து இலங்கையின் அதிபதி நிசி சரர் 
குலத்தோடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே 


வள்ளியை அணைக்கும் போது முருகனுக்கு அவன் தோள்கள் துவளுகிறது. 

அந்த வள்ளி எப்படி இருக்கிறாள் ?

குடத்தை வென்றிடும் மலை போன்ற மார்புகள். அதில் மணிகள் கோர்த்த சங்கிலியை  அணிந்து இருக்கிறாள். அவளின் சொல் கரும்பைப் போல இனிக்கிறது. அவளை அணைக்கும் போது தோள்கள் வலுவிழந்து துவளும்  அந்த முருகன் யார் ?

அன்று அலை கடலை அணைகட்டி கடந்த திருமாலின் மருமகனே.

குடத்தை வென்றிடும் = குடத்தை விட எடுப்பாக அழகாக 

கிரியென = மலையை போல 

எழில் = அழகுடன் 

தள தளத்த = தள தள என்று இருக்கும் 
 
கொங்கைகள் = மார்புகள் 

மணி = மணிகள் சேர்ந்த 

வடம் = மாலை 

 அணி = அணியும் 

சிறு குறத்தி = சிறிய குற மகள்
  
கரும்பின் = கரும்பை விட 

மெய் துவள் = மெய் துவள 

புயன் = புயங்களை கொண்ட 

என வரு வடிவேலா = என்று வருகின்ற வடி வேலனே 

குரை = அலை பாயும் 

கருங்கடல் = கடலை 

திரு அணை = பெரிய அணைகட்டி 

என முன்னம் = முன்பு 
 
அடைத்து = அடைந்து 

இலங்கையின் அதிபதி = இராவணனை 

நிசி சரர் = அரக்கர்   (?)
 
குலத்தோடும் பட = குலத்தோடு அழிய 

ஒரு கணை விடும் = ஒரு அம்பை விடும்  

அரி = ஹரி, திருமாலின்  

மருகோனே = மருமகனே 


1 comment:

  1. அந்தக் காலத்தில், "அருணகிரிநாதர்" என்ற படம் பார்த்த நினைவு இருக்கிறது. விலை மாதர் பின்னால் திரிந்த அருணகிரியாருக்கு முருகன் அருள் புரிய, அவர் கவிதைகள் பொழிகிறார். அப்படியானால், இந்தப் பாடல்களும் இறை அருளால் வந்தவைதானே?! அருமையான பாடல்கள். நன்றி.

    ReplyDelete