கலிங்கத்துப் பரணி - மார்பில் துயில்வீர்
கணவனோடு கூடி இருந்த மயக்கம் தீராமல், விடிந்தது கூடத் தெரியாமல், அவன் மார்பின் மேலேயே படுத்து உறங்கும் பெண்களே, கதவைத் திறவுங்கள்.
பாடல்
போக அமளிக் களிமயக்கில்
புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக அமளி மிசைத்துயில்வீர்
அம்பொற் கபாடம் திறமினோ.
பொருள்
போக = இன்பம் தரும்
அமளிக் = போர்
களிமயக்கில் = மிகுந்த மயக்கத்தில்
புலர்ந்த தறியா தே = பொழுது புலர்ந்ததை அறியாமல்
கொழுநர் = கணவரின்
ஆக = மார்பு என்ற
அமளி = படுக்கை
மிசைத்துயில்வீர் = மேல் துயில்வீர்
அம் = அந்த
பொற் =பொன்னாலான
கபாடம் திறமினோ = கதவைத் திறவுங்கள்
கலிங்கத்துப் பரணி ஒரு ஜொள்ளுப்பொக்கிஷம் போல இருக்கிறதே!
ReplyDelete