இராமாயணம் - கண்ணில் நின்றவன் இவன்
கவந்தனின் இரண்டு தோள்களையும் இராமனும் இலக்குவனும் போரிட்டு வெட்டினார்கள்.
அவன் சாபம் நீங்கி, அரக்க உடலை விட்டு, கந்தர்வ வடிவம் கொண்டு வானில் ஏறி நின்றான்.
பின், இராமனின் பெருமைகளை கூறுகிறான்....
பாடல்
விண்ணில் நின்றவன், 'விரிஞ்சனே
முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன்'
எனக் கருத்துற உணர்ந்தான்;
எண் இல் அன்னவன் குணங்களை,
வாய் திறந்து, இசைத்தான்;
புண்ணியம் பயக்கின்றுழி
அரியது எப் பொருளே?
பொருள்
விண்ணில் நின்றவன் = விண்ணில் ஏறி நின்றவன்
விரிஞ்சனே = பிரமன்
முதலினர் யார்க்கும் = முதலிய தேவர்கள் யாவர்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் = கண்ணில் நின்றவன் இவன்
எனக் கருத்துற உணர்ந்தான் = என் கருத்து மனதில் படும்படி உணர்ந்தான்
எண் இல் அன்னவன் குணங்களை = கணக்கில் அடங்கா குணங்களை
வாய் திறந்து, இசைத்தான் = வாய் திறந்து கூறத் தொடங்கினான்
புண்ணியம் பயக்கின்றுழி = செய்த புண்ணியங்கள் பயன் தரத் தொடங்கிவிட்டால்
அரியது எப் பொருளே? = எது தான் கடினம் ?
ஒருவன் செய்த புண்ணியங்கள் பலன் தரத் தொடங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.
புண்ணியம் செய்து கொண்டிருங்கள். அது பலன் தர கொஞ்சம் நாள் ஆகலாம். ஆனால், தரத் தொடங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.
இனி வரும் பாடல்களில் இராமனின் பெருமைகளை கூறத் ..தொடங்குகிறான்....மிக அருமையானப் பாடல்கள்.
அவற்றைப் பார்ப்போம்.

No comments:
Post a Comment