Pages

Sunday, August 10, 2014

கம்ப இராமாயணம் - உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.

கம்ப இராமாயணம் - உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.


இந்திரஜித் போரில் இறந்ததை இராவணனிடம் தூதுவர்கள்  சொன்னார்கள். 

இராவணனின் மனநிலையை கம்பர்  காட்டுகிறார்.

ஒரு புறம் கோபம். மறு புறம் மகன் மேல் பொங்கும் காதல்.  இன்னொரு புறம் அவனை இழந்த சோகம் என்று இராவணன் தவிக்கிறான். 

 பாடல் 

திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரிபுரை கண்களும்;
உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.


பொருள்

திருகு வெஞ்சினத்  = திருகு என்றால் முறுக்கு,  கோணல், மாறுபாடு என்று பொருள். திருகு வெம் சினம் என்றால் தடம் புரண்ட கோபம். மாறுபட்ட

தீநிகர் சீற்றமும் = தீயைப் போல சீற்றமும்

பெருகு காதலும் = மகன் மேல் பெருகும் காதலும்

துன்பும் = அவன் இறந்த செய்தி கேட்ட துன்பமும் 

பிறழ்ந்திட = மாற்றிப் போட

இருபது என்னும் எரிபுரை கண்களும் = இருபது என்ற தீயை  உமிழ்கின்ற கண்களும்

உருகு செம்பு என ஓடியது = செம்பு என்ற உலோகத்தை உருக்கி விட்டது போல ஓடியது

 ஊற்றும்நீர் = கண்களில் இருந்து ஊற்றுப் போல பொங்கி வரும் கண்ணீர்

ஊற்று நீர் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அது போல, அவன் கண்ணீர் வந்தது. கண்கள் சிவந்து, உடல் கொதித்ததால் அது  உருகி ஓடும் செம்பைப் போல ஆனது.

No comments:

Post a Comment