Pages

Tuesday, August 5, 2014

இராமாயணம் - எமானாலும் முடியாது

இராமாயணம் - எமானாலும் முடியாது 


போரில் இந்திரசித்து இறந்ததை தூதுவர்கள் வந்து சொல்கிறார்கள். இராவணனால் நம்ப முடியவில்லை.

எமனாவது, இந்திரஜித்தின் உயிரை எடுப்பதாவது. அவனுக்கு ஏது அவ்வளவு தைரியம்.

இந்த இந்திரசித்து ஏதோ ஒரு உலகில் ஒளிந்து கொண்டு என்னோடு விளையாடுகிறான் என்று நினைக்கிறான்.

பாடல்

'கூற்றம் உன் எதிர் வந்து, உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்!' என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.

பொருள்

'கூற்றம் உன் எதிர் வந்து = எமன் உன் முன்னால் வந்து

உயிர் கொள்வது = உன் உயிரை எடுத்துக் கொள்ளும்

ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று = ஒரு வலிமையையும் உள்ளது அன்று

எனையும் ஒளித்து = என்னிடம் இருந்து ஒளிந்து கொண்டு

ஏற்ற எவ் உலகு உற்றனை? = சிறந்த எந்த உலகுக்கு சென்றாய் 

எல்லை இல் ஆற்றலாய்!' = எல்லை இல்லாத ஆற்றல் உள்ளவனே

என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.= என்று சொல்லும் இராவணனின் ஒரு தலை



1 comment:

  1. தனது மகன் மேல் பாசம் ஒரு பக்கம், அவன் திறன் பற்றிப் பெருமை ஒரு பக்கம், ஆனால் சோகம் ஒரு பக்கம் ... ! என்ன உணர்ச்சிக் குவியல்!

    ReplyDelete